spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மௌனம் சாதித்து வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்களிடம் ஏற்படும் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-  அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயந்துவிட்டார் என்று எடப்பாடி சொல்கிறார். அப்படி சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் இந்த கூட்டணியை பார்த்து வரும் நாட்களில் அவருக்கு சந்தோஷமாகதான் இருக்கிறது. கூட்டணி உடைந்துவிட போகிறது. ஒன்றாகவே இருக்க சொல்லுங்கள் என்று ஸ்டாலின் சொல்கிற லட்சணத்தில்தான் அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது. எடப்பாடியை துளியும் மதிக்காமல், கூட்டணி அரசு அமையும் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி அப்போது பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அமித்ஷாவின் பேச்சுக்கு, அவர் அப்படி சொல்லவில்லை என்று வியாக்யானம் கொடுத்தார்.

தற்போது அதற்கு அரசியல் ரீதியாக கண்ணத்தில் அறைந்தது போல தான், தமிழில் டைப் செய்து வந்த ஒரு பக்க அமித்ஷாவின் பேச்சு ஆகும். எடப்பாடிக்கு குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வு வேண்டாமா? அமித்ஷா என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். தமிழ்நாட்டில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது சரிவராது என்று எடப்பாடி சொல்லி இருந்தால், இன்றைக்கு அமித்ஷா சொல்வாரா? அப்படி சொல்லி இருந்தால் எடப்பாடியை கூப்பிட்டு சமரசம் செய்திருப்பார்கள். அல்லது கூட்டணியை விட்டு போயிருப்பார்கள். இன்றைக்கு  இவ்வளவு துணிச்சலாக பத்திரிகைகளில் வரும் அளவுக்கு பேட்டி கொடுத்திருப்பாரா? இதற்கு எடப்பாடி என்ன சொல்ல போகிறார். அமித்ஷாவின் வாயில் இன்று வரை எடப்பாடி என்ற வார்த்தை வரவில்லை. நயினார் நாகேந்திரன் எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்கிறார். அமித்ஷா பெரியவரா?, நயினார் பெரியவரா? ஒரு பெரிய கட்சியின் மீது ஏறி சவாரி செய்து கொண்டு, அவர்கள் ஆட்சி அமைத்தாலும், அதை அதிமுக ஆட்சி என்று சொல்ல மாட்டேன் பாஜக ஆட்சிதான் என்று சொல்வேன் என்று அண்ணாலை ஒருபக்கம் சொல்கிறார். நாங்கள் கூட்டணி அரசில் பங்குபெருவோம் என்று நயினார் ஒருபக்கம் சொல்கிறார்.

முதலில் கூட்டணி ஆட்சி தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொண்டாரா? இது எப்போது நடைபெற்றது? என்று சொல்லாமல் பாஜக கூட்டணி ஆட்சி என்று சொன்னால், அவர்கள் சில்மிஷம் செய்கிறார்கள் என்று அர்த்தம். எடப்பாடி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை. நானும் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி இருக்க வேண்டாமா? உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் கூட மறைமுக தான் எடப்பாடி நாங்கள் தனித்து ஆட்சியமைப்போம் என்று சொல்கிறார். ஸ்டாலினை மட்டும் பெயர் குறிப்பிட்டு சவால் விடுகிறார். அமித்ஷாவுக்கு சவால்விட வேண்டாம். அவர் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே. அமித்ஷா ஏகாதிபத்யம் செய்கிறார் என்றால் அதற்கு வளைந்துகொடுத்தது எடப்பாடி பழனிசாமி.

பாஜகவின் நாடாளுமன்றக்குழு கூடி முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். இந்த அவமானத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை அவரே படுகுழியில் தள்ளுகிறார். இந்த பேச்சுக்களால் அதிமுகவுக்கோ, பாஜகவுக்கோ துளியும் நன்மை கிடையாது. அதனால் தான் ஸ்டாலின் பயந்துவிட்டார் என்று சொல்கிறபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. அவர் ஏன் பயப்பட வேண்டும். இந்த கூட்டணி உடையக் கூடாது என்று தான் அவர் விரும்புவார். இந்து முன்னணி மாநாட்டில் அண்ணாவை அதர்மத்தின் அடையாளமாக காட்டியது யார்? திமுகவா, இந்து முன்னணியா? பிறகு எப்படி கூட்டணியை திமுக உடைக்கிறது என்கிறார்கள். அமித்ஷா அயராமல் உழைப்பது திமுக ஆட்சிக்கு வருவதற்காக தான். எடப்பாடி மௌனமாக இருப்பதும் திமுகவுக்கு சாதகமானது தான்.

அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க திமுக முயற்சிக்கிறது. அவர்கள் நினைத்தாலும் அது முடியாது என்று நயினார் நாகேந்திரன் சொல்கிறார். என்ன அமித்ஷாவை திமுக தூண்டிவிட்டதா? அவரை இதைவிட கேவலப்படுத்த முடியுமா?  மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக கருத்துக்களை கூற வேண்டாம். இந்த லட்சனத்தில் இந்த கூட்டணி போனல் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது. அதிமுக காரன் வேலை பார்க்காமல் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ