spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடிக்கு அமித்ஷா வெடி! பாஜக கேட்ட 60 தொகுதிகள்? அன்புமணி சரண்டர் ரகசியம்!

எடப்பாடிக்கு அமித்ஷா வெடி! பாஜக கேட்ட 60 தொகுதிகள்? அன்புமணி சரண்டர் ரகசியம்!

-

- Advertisement -

திமுக  கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்த விவகாரம் தொடரபாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. ஆனால் தொகுதி விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியுள்ளார். அப்படி எங்கே போட்டியிடுகிறோம் என்கிற விவரங்களை சொன்னால் அங்கே ராமதாஸ் போட்டி வேட்பாளர்களை நிறுத்திவிடுவார். இதற்கு முன்பாக இருதரப்பிலும் மாதக் கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பிறகு கூட்டணி உறுதியாகியுள்ளது. அன்புமணி, முன் நிபந்தனையாக மருத்துவர் ராமதாசை சேர்க்கக்கூடாது என்று சொல்லியுள்ளார்.

ஆனால் அவர் திமுக கூட்டணிக்கு செல்லப் போகிறார். அங்கேயும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துவிட்டன. எத்தனை சீட்டுகள் என்றும் முடிவாகிவிட்டது. அன்புமணி போட்டியிடும் இடங்களை அறிவித்த பின்னர் அங்கே திமுக – ராமதாஸ் போட்டியிட்டு அன்புமணை தோற்கடிப்பார்கள். அன்புமணி, மாம்பழ சின்னத்திற்காகவே பாஜக கூட்டணிக்கு சென்றார் என்பது ஏற்புடையது அல்ல. பாஜக இருவருக்கும் வேறு வேறு சின்னங்களை தான் வழங்குவார்கள். பாமகவின் அங்கீகாரம் ஏற்கனவே போய்விட்டது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு மாம்பழ சின்னம் கிடைக்காது. வேறு ஏதேனும் சின்னத்தை தான் தேர்தல் ஆணையம் வழங்கும்.

ராஜ்யசபா தேர்தல் வரும் நிலையில் அதிமுக சார்பில் அன்புமணி, ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு சீட்  வழங்க கோரிக்கை விடப்படும். இதேபோல் பிரேமலதாவும் ஒரு ராஜ்ய சபா இடம் கேட்கிறார். இப்படி மற்ற கட்சியினருக்கு கொடுத்தால், அதிமுகவினருக்கு என்ன பண்ணுவார்கள். அதுவும் பாமகவுக்கு வழங்கும் ராஜ்ய சபா சீட் அன்புமணிக்காக, அல்லது சௌமியாவுக்கா என்கிற கேள்வி எழும். அன்புமணியின் அக்கா அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அவருக்கு நான் தான் சரியான  போட்டி என்று சௌமியா சொல்வதாக தகவல்கள் வெளியாகிறது.

ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தால், எடப்பாடி பழனிசாமி மீது நிச்சயம் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார். அதேவேளையில், விஜய் யாரும் எதிர்பாராத நேரத்தில் ராமதாசை சந்தித்து உடல்நலம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் விஜய் அப்படி செய்ய மாட்டார். அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். விஜய்யை பொருத்தவரை யாரிடமும் இறங்கி போக மாட்டார். தன்னை வைத்து தான் கட்சி என்று சொல்பவர் விஜய்.மருத்துவர் ராமதாசுக்கு இருக்கும் ஒரே கூட்டணி வாய்ப்பு திமுக தான்.

பிரவீன் சக்ரவர்த்தி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். விஜய் ஒரு அரசியல் சக்தியாக மாறிவிட்டார். அவருக்கு வரும் கூட்டத்தை ரசிகர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். பாஜகவிடம் காசு வாங்கிவிட்டு அவர் பேசுகிறார். அவருக்காக பாஜக லாபி செய்கிறது. அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த கையோடு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். அதற்கு முந்தைய நாளே வேலுமணி அங்கே சென்றுவிட்டார். அதற்கு காரணம் பாஜக அவரை அழைத்து தான் மிரட்டியது. வேலுமணி மீது பல வழக்குகள் உள்ளன. பாஜக மிரட்டலுக்கு பயந்து அவர் எடப்பாடிக்கு போன் போட்டிருப்பார்.

அமித்ஷா தமிழகம் வந்தபோதே அவரை பார்த்திருக்க வேண்டியது தானே. ஏன் வரவில்லை? உடனே வந்து பாருங்கள். இல்லாவிட்டால் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிடுவார்கள் என்று சொல்லியிருப்பார். உடனே இவர் அலறி அடித்துக்கொண்டு செல்கிறார். ஜனவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அதற்குள்ளாக என்டிஏ கூட்டணி என்று எல்லோரையும் கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கிறார்கள். டிடிவி சேர ஒப்புக்கொண்டதாகவும், ஓபிஸ் வேறு கட்சி தொடங்கி போட்டியிட்டால் சேர்த்துக்கொள்ள எடப்பாடி தயார் என்று சொல்கிறார்கள்.

என்னதான் அதிமுக, பாஜக கூட்டணியில் பழைய கட்சிகளை சேர்த்தாலும் என்டிஏ 3வது இடத்திற்கு தான் வரும். அதனால்தான் விஜயை கூட்டணி சேர்க்க முயற்சிக்கிறார்கள். ஜனநாயகன் படம் மற்றும் சிபிஐ-ஐ வைத்து மிரட்டி விஜயை கூட்டணிக்குள் கொண்டு வந்திடலாம் என முயற்சிக்கிறார்கள். விஜய் கூட்டணியில் சேர வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவருஐடைய முதலமைச்சர் கனவு போய்விடும். எம்.பி., எம்எல்ஏ ஆக வேண்டும் என்று விஜய் அரசியலுக்கு வரவில்லை. அவர் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடுவார்.

விஜய் துணை முதலமைச்சர் பதவி என்று அதிமுக கூட்டணிக்கு சென்றால் இன்னும் 5 ஆண்டுகளில் காலியாகிவிடுவார். அண்ணாமலை, வேலுமணி, வானதி ஆகியோர் தமிழக தேர்தல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் நயினார் நாகேந்திரனுக்கு தான் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ