spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅட்டகாசம் ஓபிஎஸ்... தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

அட்டகாசம் ஓபிஎஸ்… தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

ஓபிஎஸ்க்கு என்.டி.ஏ கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படாததால் தான் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேற்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் ஒரு பாஜக அஜெண்டாவின் கருவியாக செயல்பட்டார். எல்லா இடங்களிலும் பாஜக தனக்கு ஆதரவளிக்கும். உறுதுணையாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் பாஜக சாமர்த்தியமாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியை பிடித்துக்கொண்டு, ஓபிஎஸ்-ஐ கைவிட்டது. கடந்த மக்களவை தேர்தலின்போது ஓபிஎஸ்-ஐ தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வற்புறுத்தியது. ஆனால் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். சுயேட்சையாக பலா பழம் சின்னத்தில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்குகளை வாங்கினார். ஓபிஎஸ்ன் அரசியல் வாழ்க்கை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்துவிடும் என்கிற நிலை வருகிறது. அப்போது தான் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து, தன்னை என்ன செய்ய போகிறீர்கள். எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்கான ஒரு கருவியாக என்னை பயன்படுத்துகிறீர்கள். எவ்வளவு நாட்களுககு என்னை அப்படி பயன்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுகிறது. அப்போது பிரதமர் மோடி உடனான சந்திப்பு நிகழாமல் போனதால், தனக்கும் சுயமரியாதை உள்ளது என்று வெளியே வந்துவிட்டார்.

நயினார் நாகேந்திரன் தற்போது ஓபிஎஸ்-ஐ மீண்டும் பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பதற்காக நயினாருக்கு அனுப்பிய மெசேஜ்களை காண்பித்து, அவருடைய மூக்கை அறுத்துவிட்டார். பாஜகவை பொறுத்தவரை யாராக இருந்தாலும் கிள்ளுக் கீரைதான். தூக்கிபோட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஓபிஎஸ்-ஐ திட்டமிட்டு என்.டி.ஏ கூட்டணியில் இருந்து  வெளியேற்றவில்லை. ஆனால் அவரை உதாசினப்படுத்தினார்கள். அதனால் அவர் வெளியேறினார். துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றார். பாஜகவின் அணுமுறை அதுதான். அவர்களை நம்பி செல்பவர்களை கழுத்தறுப்பது தான் பாஜகவின் பண்பாகும்.

விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம்-TTV தினகரன் விமர்சனம்

தினகரன், ஓபிஎஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு மிகவும் அவசியம். அவரை மீண்டும் அழைதது வர வேண்டும் என்று சொல்கிறார். தினகரன், ஒபிஎஸ்-ஐ ஆதரிக்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ்-ன் அறிக்கைக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். ஓபிஎஸ்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் தினகரனுக்கும். அவர் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடலாம். ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் தனித்தனியாக நின்று அரசியல் செய்ய முடியாது. இருவரும் ஒன்று சேர்ந்தால் பெரிய அரசியலை மேற்கொள்ளலாம். தினகரன், அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ஓபிஎஸ் தொடங்க போவது அதிமுகவின் மற்றொரு அணியாகும். அதனால் இருவரும் கூட்டணிதான் அமைக்க முடியுமே தவிர, ஒன்றாக சேர முடியாது. எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை கைப்பற்றினால் தான் இருவரும் ஒன்றிணைய முடியும். என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்-ஐ வெளியேற்றியது அமித்ஷா தான். ஓபிஎஸ்க்கு ஆதரவு என்பது எடப்பாடியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான். கொள்கை ரீதியாக நிற்பவர்களும், பாஜகவை எதிர்ப்பவர்களும் ஓபிஎஸ் உடன் நிற்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி, பாஜக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்றும், தமிழ்நாட்டிற்காக ஏராளமானவற்றை செய்திருப்பதாகவும் சொல்கிறார். அப்படி பாஜக என்ன தமிழ்நாட்டிற்கு செய்தது என்று அவர் சொல்வாரா? எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியில் நாடாளுமன்றத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி உங்களுக்கு கிடைத்தது என்ன? கஜா புயலுக்கு தமிழ்நாடு அரசு 14 ஆயிரம் 900 கோடி நிதி கேட்ட நிலையில், மத்திய  அரசு என்ன கொடுத்தது? பாஜக என்ன செய்தது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் மக்கள் வாக்களித்து இருப்பார்கள். பாஜக மதவாத கட்சி அல்லாமல் வேறு என்ன கட்சி. நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் பாஜக விரட்டி விரட்டி அடிக்கிறது. தாக்குதல் நடைபெற்றால் அதை பயன்படுத்தி இந்து சென்டிமென்டை உருவாக்குகிறார்களே, அதற்கு பெயர் என்ன? சனாதன தர்மம் என்றால் என்ன? சமத்துவமான கட்சி பாஜக என்றால் எதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தை அகற்ற பாஜக துடிக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது, மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் கூறத்தான் என்ற ஒபிஎஸ் சொல்லி உள்ளார். ஏனென்றால் திமுக உடன் சேர்ந்து ஓபிஎஸ் எதையும் செய்ய முடியாது. அதிமுகவின் அரசியல் என்பது திமுகவின் அரசியலுக்கு நேர் எதிரானது. அதனால் திமுகவால் ஒபிஎஸ்க்கோ, ஓபிஎஸ் ஆல் திமுகவுக்கோ பலன் கிடையாது. ஓபிஎஸ் தனி அரசியல் செய்து பாஜகவையும் பழிவாங்கலாம். எடப்பாடி பழனிசாமியையும் பழிவாங்கலாம். எனவே திமுக உடன் ஓபிஎஸ் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது. அன்வர்ராஜா போன்ற தனிப்பட்ட நபர்கள் திமுகவில் இணையலாம். ஆனால் ஓபிஎஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். அவர் திமுகவில் இணைவது சாத்தியமற்றது. விஜய் சிறப்பாக அரசியல் செய்து, மக்களிடம் வரவேற்பை பெற்றால் ஓபிஎஸ், தினகரன், பாமக  போன்றவர்கள் அவருடன் இணைவார்கள். பாஜக, ஓபிஎஸ் போன்றவர்களின் வாக்குகளை, தன்னுடைய வாக்காக காண்பிக்க முயற்சிக்கிறது. ஆனால் ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் அதற்கு காரணம் என்கிறபோது அவர் தன்னுடைய பலத்தை நிருபிக்க பார்க்கிறார். இது பாஜக, எடப்பாடி பழனிசாமிக்கு இடிக்கிறது. பாஜக அழைத்து மீண்டும் சென்றால் அவர் செல்ல மாட்டார். ஏனென்றால் அது அவரது தன்மானப்பிரச்சினையாகும். எனவே அவர் செல்ல மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ