spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஈரோடு இடைத்தேர்தல்; திமுக - நாம் தமிழர் கட்சி நேருக்கு நேர் போட்டி

ஈரோடு இடைத்தேர்தல்; திமுக – நாம் தமிழர் கட்சி நேருக்கு நேர் போட்டி

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக – நாம் தமிழர் கட்சி முதன் முறையாக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. மற்ற அதிமுக, தவெக, பாஜக, பாமக ஆகிய எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் நலம் சரியில்லாமல் கடந்த மாதம் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கம்போல் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

we-r-hiring

ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும் திமுக போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்து விட்டார். அதனால் திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பு இணைச்செயலாளருமான வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று இந்த தேர்தலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்று கூறி போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டதால் தேர்தல் களத்தின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. தமிழக வெற்றிக் கழகமும் எங்களுடைய இலக்கு 2026 மட்டுமே என்று கூறி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.

திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முதல்முறையாக நேரடி போட்டியில் சந்திக்க உள்ளது. கடந்த சில தினங்களாக தந்தை பெரியாரை இழிவாகவும், தரம் தாழ்ந்தும் சீமான் பேசி வருகிறார். இந்த நிலையில் பெரியார் பிறந்த மண்ணில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் தேர்தல் களம் வேறு வடிவத்தில் சூடுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அதிர்ப்தி அடைந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெரிய அளவில் அந்த கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வருகின்றனர். அதனால் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய அவர்களால் முடியாது என்றும் பாஜகவின் கொள்கையை, அவர்களின் எதிர்பார்ப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியினர் பேசி வருவதால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பெரியாரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் சீமானை ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய விடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியினர், பெரியாரிய தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை செய்து வருகின்றனர். மேலும் கடந்த 2023ல் சீமான் வாங்கிய ஓட்டுகள் கூட இந்த தேர்தலில் வாங்குவதற்கு விடக்கூடாது என்று திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவித்தப்பின்னர், இரண்டு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தப் பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்கும். சீமானின் வாய்க்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ