Homeசெய்திகள்கட்டுரைஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது எப்படி?

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது எப்படி?

-

- Advertisement -

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது எப்படி?

உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன, அதை LTL என்று அழைப்பார்கள். LTL- யினாள் ஹார்ட்அட்டாக் வருமா?

பதில் சொல்கிறார், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த இதயநோய்  மருத்துவர் கார்த்திகேயன்.

நாம் உண்ணும் உணவில் வரும் கெட்ட கொலஸ்ட்ராலையே LTL என்கிறோம். LTL அதிகமானால், இதயம் சம்மந்தமான நோய்கள் வரும், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்க்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

இந்த LTL-ன் சரியான அளவு 100-க்கு குறைவாக இருக்க வேண்டும். 100-க்கு அதிகமாக இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவரின் வயதை பொருத்து தான். அவற்றை உணவின் மூலம் சரி செய்ய முடியுமா, அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? என்று தீர்மானிக்க முடியும்.

அறுவை சிகிச்சை என்றால், அதெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான். என்று பல இளைஞர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய சூழலில் LTL அறுவை சிகிச்சைக்காக, அதிகம் சேர்க்கப் படுபவர்கள் இளைஞர்கள் மட்டுமே.

காரணம் அவர்கள் உடலியக்கம் இன்றி இருக்கிறார்கள். ஆரோக்கியம் இல்லாத வெளி உணவுகளை உண்பது, இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு மருந்துகள் அதிகம் தேவைப்படுகிறது.

கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நிலையில், முதல் கட்டமாக LTL-யை குறைக்க தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்கள் கழித்து மருத்துவரை அணுகி LTL-டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும், 100-க்கும் குறைவாக இல்லையென்றால், தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

LTL- குறைப்பதற்கான வழி :

  • எந்த வயதினராக இருந்தாலும், அவர் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்.
  • கெட்ட கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிக முக்கியமான ஒன்றாகும்.
  • குறிப்பிட்ட காலம் வரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதயநோய் உள்ளவர்கள் மட்டுமின்றி, 60 வயதுக்கு மேல் உள்ளவர்களும், கட்டாயம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் அரைமணி நேரம் நடக்க வேண்டும்.
  • உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் 6மணி நேரம் உறங்க வேண்டும்.

இதை பின் பற்றினால் இதயநோய் மட்டுமல்ல, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் நோய், போன்றவையும் குணமாகும்.

இவற்றை நாம் பின் பற்றாமல் விட்டால் இரத்த நாளங்கள் தடித்து, இரத்த அழுத்தமும் சேர்ந்து விடும். புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்க்களை, அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதை சரியாக பின் பற்றினாளே இந்த பிரச்சனையில் இருந்து நீங்கலாம்.

MUST READ