spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாசின் அடுத்த மூவ்! 1000 கோடி யாருக்கு? குபேந்திரன் வெளியிட்ட ஆதாரம்!

ராமதாசின் அடுத்த மூவ்! 1000 கோடி யாருக்கு? குபேந்திரன் வெளியிட்ட ஆதாரம்!

-

- Advertisement -

மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெறுவது கட்சி சண்டை அல்ல என்றும், இது சொத்து சண்டை என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

\

we-r-hiring

மருத்துவர் ராமதாஸ் நேர்காணல் மற்றும் அவர் அன்புமணி மீது முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு வேதனையான செய்தியாளர் சந்திப்பை, இதுவரை எந்த தலைவரும் இந்த அளவுக்கு வெளிப்படுத்தியது இல்லை. அந்த காலத்தில் திமுக, அதிமுக என்கிற 2 திராவிட கட்சிகளுக்கு மத்தியில் பாமகவை நிலை நிறுத்த ராமதாஸ் எடுத்த முயற்சிகள். அதற்கான விமர்சனங்கள். பாமக வளர்ந்த விதம். அவருக்கு பெயரே மரம் வெட்டி. அந்த விமர்சனங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு அரசியலில் முன்னுக்கு வந்தார். ஆனால் அந்த அளவுக்கு அரசியலில் அன்புமணி கஷ்டப்பட்டாரா? வாரிசு என்கிற அடிப்படையில் சொகுசாக வந்து, பாமக தலைவர் பதவியை கைப்பற்றிக்கொண்டார். அனைத்து தவறுகளுக்கும் நான் தான் காரணம் என்று நேற்று மருத்துவர் ராமதாஸ் வெளிப்பாடையாக ஒப்புக்கொண்டுள்ளார். அனைத்து தவறுகளுக்கும் காரணம் மருத்துவர் ராமதாஸ்தான். இது உட்கட்சி பூசல் கிடையாது. இது முழுக்க முழுக்க அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே நடக்கிற சொத்து சண்டையாகும்.

பாமகவில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேறி உள்ளனர். பேராசிரியர் தீரன் வெளியே போய்விட்டு உள்ளே வந்துவிட்டார். அவர் எப்படி வெளியே அனுப்பப் பட்டார். வேல்முருகன் யாரால் வெளியே அனுப்பப்பட்டார்?. அன்புமணிக்கு எதிராக உள்ள எல்லா தலைவர்களையும் வெளியே அனுப்பியது யார் தவறு? ஒட்டுமொத்தமாக இந்த கட்சி யாரிடம் போக வேண்டும். வன்னியர் அறக்கட்டளையின் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள், சமீப காலமாக மாறி மாறி கூட்டணி வைத்ததால் சேர்ந்துள்ள கஜானா. அந்த கஜானா எங்குள்ளது? ஆயிரம் கோடி அறக்கட்டளை சொத்துக்கள் எங்குள்ளது? எங்கு போக போகிறது? இந்த சண்டைதான் தற்போது இருவருக்கும் இடையே உள்ளது. இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த சண்டையும் கிடையாது. காடு வெட்டி குரு அவமானப்படுத்தப்பட்டார். இது ஏற்கத் தக்கது அல்ல என்று ராமதாஸ் சொல்கிறார். இதை என்றைக்கு சொல்கிறார்? காடு வெட்டி குரு இறந்த பிறகு.

ஜி.கே.மணி, பாமக கட்சியின் தலைவராக இருந்தார். அந்த கட்சி தலைவர் பதவியை, ஜி.கே.மணியிடம் இருந்து பறித்து, தன் கணவருக்கு வேண்டும் என்று மகாபலிபுரம் ஓட்டலில் மருமகள் சவுமியா தன்னிடம் பேசினார். தனக்கு 8 நாட்கள் கெடு விதித்தார். ஒன்றரை மாதங்கள் கழித்து தலைவர் பதவியை கொடுத்தேன் என்று ராமதாஸ் சொல்கிறார். அது யாருடைய தவறு? தமிழ்க்குமரன், இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்தால் அதை ஏற்கக்கூடாது என்று பல் விளக்கிக் கொண்டிருக்கிறபோது போன் வருகிறது. அவர் எத்தனை கண்ணீர் வடித்திருப்பார். அவரது அப்பா ஜி.கே.மணி எத்தனை கண்ணீர் வடித்திருப்பார். பாட்டாளி மக்கள் கட்சிக்காக ரத்தத்தை, வியர்வையை சிந்திய தொண்டர்கள் எத்தனை கண்ணீர் வடித்திருப்பார்கள்? இது முழுக்க முழுக்க சொத்து சண்டையாகும்.

2011 கால கட்டத்தில் கட்சிக் கூட்டங்களில் பேசும் மருத்துவர் ராமதாஸ், தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர்களில் தனது மகன் அன்புமணி தான் நம்பர் ஒன் என்று பாராட்டுவார். அன்புமணி சர்வதேச அளவில் விருது ஒன்றை வாங்கினார். அதை வைத்து உலகளவில் விருது வாங்கிய ஒரே தமிழ்நாட்டு மத்திய அமைச்சர் தன் மகன் அன்புமணி என்று ராமதாஸ் சொல்லுவார். 2020ல் மருத்துவர் ராமதாஸ் ஊடகங்களுக்கு எழுதிய கடிதத்தில், அன்புமணி போன்ற திறமைசாலிகளை எவரும் அங்கீகரிப்பது இல்லை என்று கூறினார்.

ஆனால் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், அன்புமணி கூசாமல் பொய் சொல்வார். தலைமைப் பண்பு இல்லாதவர். மேடை நாகரிகம் தெரியாதவர். பெற்ற தாயை தண்ணீர் பாட்டிலால் வீசி எறிந்தார் என்று சொல்கிறார். இவைற்றுக்கு எல்லாம் எப்போது கோபம் வருகிறது? உங்கள் மகள் வழி பேரனுக்கு பதவி கிடைக்கவில்லை. கொடுத்த பதவியை அன்புமணி ஏற்கவில்லை என்பதால் கோபம் வருகிறது. சட்டமன்றத்திற்கு செல்ல அனுமதி கேட்ட ஜி.கே.மணியை, மேடையில் வைத்து அவதூறு ஆக பேசினார். அப்போது, அன்புமணியை கண்டித்தாரா? இன்றைக்கு காடுவெட்டி குருவின் மகள் பேசுவது நியாயமாக தோன்றவில்லையா?

ராமதாஸ் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் அதற்கு யார் காரணம்? ஒருவரை வளர்த்து விடுவது தவறு இல்லை. வளர்த்து கட்டுப்படவில்லை என்றால் அந்த கடாவை சரியாக வளர்க்கவில்லை என்றுதானே அர்த்தம். வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களுக்கான நினைவு மண்டபத்தை, பாமக தலைவர்கள் எத்தனை பேர் போய் பார்த்துள்ளனர். அந்த போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்தின் நிலை என்ன? அவர்கள் குடும்பத்தினர் முன்வரிசையில் உட்கார வைக்கப்படாமல், அன்புமணி குடும்பம் தான் முன்வரிசையில் உள்ளது. இது முழுக்க முழுக்க குடும்ப சண்டை. சொத்து சண்டை.

அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறபோது, என் வீட்டில் உள்ள பெண் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார். தற்போது, அன்புமணி மகள்கள் மேடையில் பங்கேற்றது. சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிட்டது ராமதாசுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். அரசியலில் ராமதாஸ் தன்னுடைய வாரிசாக முகுந்தனை பார்க்கிறார். கட்சி நாளைக்கு அன்புமணியின் மகள்வழி சொந்தங்களுக்கு போகும். மகள் வழியிலான ஆண் வாரிசுக்கு கட்சி போக வேண்டும் என்றுதான் ராமதாஸ் நினைக்கிறார்.

கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணி இருவருமே தவறு செய்துள்ளனர். 2009ல் அதிமுக கூட்டணியில் இருந்தார். 2011ல் ஒருவேளை அதிமுகவில் இருந்திருந்தால் 2 வருடத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை, 2 ஜி விவகாரம் போன்றவை வெடித்து சிதறி இருக்கும். இதை ராமதாஸ் உணராமல் போனது பாவம். அவர் மாறி மாறி கூட்டணி வைத்தார். அதன் பிறகு அந்த இடத்திற்கு அதிமுக உடன் தேமுதிக வந்துவிட்டது. அதனால் பாமக பட்ட பலன் போய்விட்டது. உண்மையிலேயே அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் நிச்சயமாக பாமக கணிசமான வெற்றியை பெற்றிருக்கும். தேமுதிக வளர்ந்திருக்காது. எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக இழந்திருக்காது. நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும்.

ஒரு தந்தை என்ற அடிப்படையிலும், கட்சியின் நிறுவனர் என்கிற அடிப்படையிலும் தாயை அடிக்க வந்தவர் அன்புமணி என்று ராமதாஸ் சொல்கிறார். தற்போது கட்சி முழுக்க முழுக்க அன்புமணியிடம் தான் உள்ளது. ராமதாசிடம் இல்லை. அவரிடம் 7, 8 பேர் தான் உள்ளனர். என்ன இருந்தாலும் இந்த சம்பவங்களில் அன்புமணியின் பிம்பம் ஒட்டு மொத்தமாக காலியாகி விட்டது. ராமதாஸ் அவர் வைத்த விமர்சனங்கள் மக்களிடம் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால் அன்புமணி எந்த கட்சியுடன் போய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும், ராமதாஸ் வைத்த விமர்சனங்கள் என்பது காலத்திற்கும் நிற்கும். மிகப்பெரிய பழிச் சொல்லுக்கு அன்புமணி ஆளாகிவிட்டார். அவர் எந்த பக்கம் எதிர்வினை ஆற்றினாலும் பதில் கடுமையாக வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ