Homeசெய்திகள்கட்டுரைஒரே மாதிரி ஸ்கிரிப்ட்! தப்பு தப்பான தகவலால் மாட்டிய விஜய்! வச்சு செய்யும் திமுக!

ஒரே மாதிரி ஸ்கிரிப்ட்! தப்பு தப்பான தகவலால் மாட்டிய விஜய்! வச்சு செய்யும் திமுக!

-

- Advertisement -

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியை கண்டிக்கும் துணிவு, தவெக தலைவர் விஜய்க்கு கிடையாது என்று திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் திமுக மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்து அக்கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-  தவெக பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய் முதன் முறையாக திமுகவின் பெயரை சொல்லி பேசியுள்ளார். திமுக, பாஜகவின் பெயர்களை சொல்வதற்கே விஜய்க்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. திரைப்படத்தில் பேசுவதை போன்று பன்ச் டயலாகுகளை தான் அவர் பொதுக்குழுவில் பேசியுள்ளார். விஜயின் பேச்சுக்களை பொருட்படுத்துவதா? அல்லது காமெடி என்று கடந்து செல்வதா? என தெரியவில்லை.

வீட்டிற்குள் ஏசி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பன்ச் டயலாகுகளை பேசிக் கொண்டிருந்தால் மக்களுக்கு என்ன பயன்?. தன்னுடன் ஆதவ் அர்ஜுனாவை வைத்துக்கொண்டு விஜய் ஊழலை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெறவில்லையா? அவரது மாமனார் சொத்துக்கள் அவருக்கு வரவில்லையா?. ஆதவ் அர்ஜுனா அவரது சொத்துக்கணக்குகளை வெளியிட தயாராக உள்ளாரா? அவர் எந்த எந்த நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். எந்த எந்த நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் அவரது மாமனாரிடம் இருந்து வந்தது என்று சொல்ல தயாராக இருக்கிறாரா? இப்படிபட்டவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்றால் யார் அதை பெரிதாக எடுத்துக்கொள்வார்கள். திமுக மீது விஜய் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்பது பொதுவான குற்றச்சாட்டுகளே. அதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொதுப்படையாக சொல்லக் கூடாது. தமிழ்நாட்டில் பெண்கள் யாருமே சாலையில் நடமாடவில்லையா? எல்லாம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்களா? எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதற்கு பின்னால் சதி ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ஏனென்றால்  வேலைக்கு போகும் பெண்கள் அதிகம் உள்ளது தமிழ்நாட்டில் தான்.  இது கடந்த 70 வருட திராவிட ஆட்சியில் செய்துள்ள சாதனையாகும். அப்படிபட்ட பெண்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தற்போது விஜயும் அதில் சேர்ந்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பாதி தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் இங்கே வந்து பாதுகாப்பு இல்லை… பாதுகாப்பு இல்லை… என்று சொல்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் செல்வாக்கு, எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் செல்வாக்கு மோடி முதல் தற்போது கட்சி தொடங்கியுள்ள விரை வரை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் திமுகவுக்கு கிடைத்துள்ள ஆதரவு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், இலவச பேருந்து பயணம், அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டை முதலமைச்சர்  உயர்த்தியுள்ளார். அதன் காரணமாக பெண்களின் ஆதரவு பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்வது எதிர்க்கட்சிகளின் கண்களை உருத்துகிறது. அதனால் அதனை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களின் விகிதத்தை திமுக அரசு குறைத்திருக்கிறது. பெண்களுடைய பேராதரவு திமுக அரசுக்கு இருக்கிறது. அதனால் எப்படியாவது அவர்களை திமுகவிடம் இருந்து அந்நியப்படுத்தி விட முடியுமா? என்கிற முயற்சிதான் இது. விஜய்க்கு யாரோ பின்னால் இருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள். அவரும் அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்... அடித்துச் சொல்லும் அண்ணாமலை!

விஜய், திமுகவுக்கும் , தவெகவுக்கும் இடையில்தான் போட்டி என்று சொல்லுகிறார், இதனால் அதிமுக தான் அச்சப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வரலாற்றில் நேற்று கட்சி தொடங்கிவிட்டு நாளை முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்று அனைவருக்கும் தெரியும். திரைத்துறை பின்னணி கொண்டவர்  மிகப் பெரிய தலைவராக இருந்தார் என்றால் அது எம்ஜிஆர் தான். அவர் கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டில் முதலமைச்சர் ஆகிவிட்டாரா? அவர் அதற்கு முன்பாக 20 வருடங்கள் திமுக மேடைகளில் திமுகவின் கொள்கைகளை முழங்கிக் கொண்டிருந்தவர். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியை விட்டு போனார். மோடியின் பெயரை சொல்லிவிட்டேன் என்றால், உங்கள் மீது உள்ள விமர்சனங்கள் போய்விடுமா? உங்கள் மீது உள்ள விமர்சனம் என்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியை எதிர்க்க உங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ