spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் தான் Boss! தெளிவான ரூட்டில் திமுக! ராகுல் சொன்ன முக்கியத் தகவல்! ரகசியம் உடைத்த...

ஸ்டாலின் தான் Boss! தெளிவான ரூட்டில் திமுக! ராகுல் சொன்ன முக்கியத் தகவல்! ரகசியம் உடைத்த கான்ஸ்டன்டைன்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலை முதலமைச்சர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதுடன், கட்சியினரையும் முழு வீச்சில் ஈடுபடுத்தி வருவதாகவும் திமுக செய்தி தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி விவகாரங்கள குறித்து பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது :- தமிழ்நாட்டு மக்களுக்கு கூட்டணி ஆட்சி என்பது சென்டிமெண்ட் ஆகவே ஒத்துவராது. 1980களில் திமுக, காங்கிரஸ் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அதேபோல் 2011ல் திமுக போட்டியிட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதேபோல் 2016ல் மக்கள்நலக் கூட்டணியையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. மக்களை பொறுத்தவரை ஒருவரிடம் ஆட்சியை தர வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டு பின்னர், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாதபோது ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சி. ஆனால் திமுக உடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டுவிட்டு, பின்னர் ஆட்சியில் பங்கு கேட்பது ஏற்புடையது அல்ல. அது கூட்டணி ஆட்சி இல்லை.

mk stalin rahul gandhi

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை 124 தான். உறுதியாக தெரியும் ஆட்சி அமைக்க தேவையான பெறும்பான்மை கிடைக்காது என்று. எப்போதும் வெற்றி வாய்ப்பு என்பது 60 முதல் 70 சதவீதம் இடங்கள் தான் வரும். ஆனால் பெரிய அரசியல் நிகழ்வுகள் நடைபெறுகிறபோது அது மாறும். உதாரணமாக ராஜிவ்காந்தி மரணத்தின்போது ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஆனால் 1996ல் ஜெயலலிதாவின் ஊழல் காரணமாக திமுக கூட்டணி மிகப்பெரிய பெற்றியை பெற்றது. அரசியலில் எந்த பிரச்சினையும் இல்லாதபோது பெரிய கட்சி 150 – 160 இடங்களிலும், மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்குவார்கள்.

கூட்டணி கட்சிகளின் பலத்தால் தான் திமுக வெற்றி பெற்றது என்கிறார்கள். 2011ல் திமுக 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களை பிடித்தது. ஆனால்  காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை மட்டுமே பிடித்தது. அவர்களுக்கு பலம் இருந்தது என்றால் 40 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தாலும் திமுக வர வேண்டும் என்று நினைக்கிறபோது அதன் கூட்டணி கட்சிகளும் வரும். அதிமுக வர வேண்டும் என்று நினைக்கும்போது அவர்களின் கூட்டணி கட்சிகளும் வரும். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பேசுவதில் என்ன தர்க்கம் உள்ளது.

கூட்டணி ஆட்சி என்பதை மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஸ்டாலினை நம்பிதான் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள். மக்கள் ஒரு தலைவர் மீது, அந்த தலைவர் அளிக்கிற வாக்குறுதிகள் காரணமாக தான் வெற்றி பெறுவார்கள். திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சொன்னார். அதேவேளையில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறபோது காங்கிரஸ் கட்சியில் உள்ள 10 எம்.பிக்களில் 9 பேர் கருத்து தெரிவிக்கவில்லை. ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஒருவர் பேசியதை மட்டும் வைத்து பேசுவது அரசியலாகும். திமுக அமைச்சர்களால் ஒரு கட்டத்திற்கு மேலாக பொறுக்க முடியாமல் விமர்சனங்களை வைக்கிறார்கள். கட்சி உணர்வு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. காங்கிரசை பொறுத்தவரை ஒன்று இக்கரைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் அக்கரைக்கு போக வேண்டும். இரண்டிலும் இல்லாமல் நடுவில் இருப்பது வாக்குகள் கன்வர்ஷனில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் எம்.பி. ஒருவருடைய கருத்தால், அக்கட்சியினர் போட்டியிடும் 25 தொகுதிகளில் திமுகவினர் வேலை பார்க்க மாட்டார்கள். ஒன்று உங்கள் தலைமையிடம் பேசினீர்களா தூர போய் விடுங்கள். இருப்பதாக இருந்தால் தலைமை சொல்வதை கேளுங்கள். கெடுக்காதீர்கள். கம்யூனிஸ்ட்டுகள், விசிக போன்றவர்களுக்கும் கோபம் இருக்கும். ஆனால் அதை எங்கே பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறதல்லவா? அப்படி பேசினால் அமைச்சர்களிடம் எதிர்வினை எதார்த்தமாக வந்து விழுந்துவிடும். அதை ஒன்றும் செய்ய முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலை திமுக மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறது. முதலமைச்சர் இரவு பகலாக உழைப்பது மட்டுமின்றி தொண்டர்களையும் உழைக்க செய்கிறார்.

மாவட்ட செயலாளர் முதல் பூத் கமிட்டி மெம்பர் வரை யாரும் 6 மணி நேரத்திற்கு மேலாக தூங்க முடியாது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் ஒரு பக்கம் போகிறது. மற்றொருபுறம் தலைகுனிய விடமாட்டோம் பிரச்சாரம் போகிறது. வாக்குச்சவாடி முகவர்கள் கூட்டம் மற்றும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது இல்லை என்று சொல்கிறார்கள். அந்த வரலாற்றை மு.க.ஸ்டாலின் மாற்றி எழுதிவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசு 2.0க்கு தலைமை ஏற்று நடத்துவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ