spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமுடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!

முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் சம்பவம் குறித்த மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் விஜயை காப்பாற்ற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு எங்கே வந்தது? அதிமுக காலி. கட்சி தவறான தலைமைக்கு போய்விட்டது என்று விஜய் சொல்கிற நிலையில், அதையும் தாண்டி அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் முட்டுக் கொடுக்கிறார்? எடப்பாடி பழனிசாமி, விஜய், பாஜக, சீமான் போன்ற எல்லோருக்கும் ஒரே நோக்கம் தான். அது திமுகவை தோற்கடிக்க வேண்டும். ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான். விஜய் மொழியில் சொல்வதென்றால் ஒரே அஜெண்டாதான். அதனால் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டதால் இதற்கு மேல் எடப்பாடி பழனிசாமியால் வாய் திறக்க முடியாது. இதற்கு மேல் அவர்கள் மாறிவிடுவார்கள். இன்று வரை அவர்கள் எதிர்பார்த்தது என்ன என்றால் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு விடும் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலானய்வு குழு அமைத்தது தான் அவர்களின் அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு பாஜக தான் காரணம். அவர்கள் திமுகவை தமிழ்நாட்டில் இருக்கும் தேர்ந்த அரசியலின் அடையாளமாக பார்க்கிறார்கள். திமுகவை உடைத்துவிட்டால், இதை உடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதிமுகவை ஒன்றுமில்லாமல் செய்தாகிவிட்டது. விஜய் டம்மி பீஸ். இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு திமுகவை தோற்கடித்து ஆட்சியை பிடித்து விட்டோம் என்றால், அதற்கு பிறகு தமிழ்நாட்டை மூன்றாக பிரித்து விடலாம். மொழியை திணித்துவிடலாம் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இதற்கு ஒரே தடையாக இருப்பது திமுக தான். அந்த திமுகவை அழிப்பதற்கு எல்லோரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். அதில் விஜயும் ஒரு கருவி. இது அவருடைய ரசிகர்களுக்கு தெரியாது. நமக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி ஒரு பாஜக தான். ஆனால் அதிமுக என்று வெற்று வார்த்தைகளுக்கு சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக அணி, பாஜக அணி என இரண்டு முனை போட்டிதான். 5 முனை போட்டி என்பதெல்லாம் இவர்கள் கொடுக்கும் உருவகம்தான். ஆனால் அப்படி எதுவுமே கிடையாது. விஜய்க்கு போடும் ஓட்டும் பாஜகவுக்கு தான். எடப்பாடிக்கு போடும் ஓட்டும் பாஜகவுக்கு தான். பாஜகவுக்கு போடும் ஓட்டும் பாஜகவுக்கு தான். சீமானுக்கு ஓட்டு போடலாம். ஆனால் அது பாஜகவின் நோக்கத்திற்கு தான் சாதமாக முடியும். இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய், தன்னை தமிழ்நாட்டு பெண்களுடைய குழந்தைகளின் தாய் மாமன் என்று சொல்கிறார். அவருடைய அக்கா – தங்கை என்றால் விட்டு விட்டு ஓடுவாரா? துக்கம் சொல்வதற்கே அவருக்கு 3 நாட்கள் ஆனது. அப்போதும் மன்னிப்பு கேட்கவில்லை. ஏனென்றால் அது வேறு ஒருவர் செய்த குற்றமாம்? விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் கூட்டநெரிசல் சம்பவமே நடந்திருக்காது என்று போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் சொல்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் நாங்கள் சொல்கிறோமே. நீதிமன்ற உத்தரவின்படி விஜயின் பேருந்தை பறிமுதல் செய்த உடன், அதில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் எல்லாம் வெளியே வரும். அப்போதுதான் உங்களுக்கு உண்மை தெரியும். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தவெகவினர் பேசுவதற்கு எதுவும் இல்லை. இனி உணர வேண்டியது விஜயின் ரசிர்கள்தான். அதிமுக – பாஜகவுக்கு இனி பேசுவதற்கு எதுவும் கிடையாது. நானும் தான் விஜயிடம் வந்தேன். பிறகு ஏன் வெளியேறினேன்? நேர்மையற்ற ஒரு நடைமுறை அவரிடம் இருக்கிறது. ஆசை மட்டும் தான். அதற்கான அடிப்படை அறிவு எதுவுமே அவரிடம் கிடையாது.

அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது. விஜய் தங்கள் கூட்டணிக்கு வந்தால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதனால் அதிமுக, பாஜகவினர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அப்படி விஜய், பாஜக உடன் இணைந்தாலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மக்கள் ஒன்றை உணராமல் ஒன்றை செய்வார்கள். ஆனால் தெரிந்துகொண்ட பிறகு அவர்கள் ஏமாற மாட்டார்கள். பாஜக யார் என்று மக்களுக்கு தெரியும். அவர்களுடன் விஜயும் போய் சேர்ந்தார் என்றால் இவருடைய யோகியதையும் புரியும். விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுகிறது. விஐயை வழக்கில் கொண்டுவராவிட்டால் அந்த வழக்கே நிற்காது. அதைதான் நீதிமன்றம் சுட்டிக்காட்டி வழக்கை மாற்றி பதிவு செய்ய சொல்கிறது. அந்த இடத்திற்கு விஜய், சரியான நேரத்துக்கு வந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்காது. அப்போது விஜயை சேர்க்காமல் எப்படி வழக்கு போட முடியும். எனவே வழக்குப் போடப்பட்ட முறை தவறு. எனவேதான் முதலில் இருந்து வழக்கை மாற்றி பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் சொல்கிறது.

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

இதற்கு பிறகு விஜயின் நிலைப்பாடு என்பது,  அமித்ஷா முடிவு எடுப்பார். அதற்காக தான் இங்கிருந்து ஆதவ் அர்ஜுனா போயிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருப்பார்கள். விஜய் ரசிர்களும் தெளிவடைய தொடங்குவார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுகளை படித்தார்கள் என்றால் அவர்களுக்கும் தெளிவு பிறக்கும். எஞ்சி இருப்பவர்களும் அஸ்ரா கார்க்கின் புலனாய்வு அறிக்கை வந்த உடன் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியில், திமுகவுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்ததால் தான் விஜயை வைத்து திமுகவுக்கு எதிராக ஒரு அவநம்பிக்கை பிரச்சாரம் செய்தார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அது அம்பலமாகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமி இன்னும் தனக்கு இருக்கக்கூடிய இடத்தை இழப்பார். அது பாஜகவுக்கு ஒரு அட்வாண்டேஜ் தரும். நிறைய இடங்களை புடுங்கிகொண்டு அவரை ஒரு வழிசெய்து அனுப்பி விடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ