இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய கம்பீரமான, உரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களையில் இந்தி திணிப்புக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை குறித்து பத்திரிகையாளர் செந்தில் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவையில் இந்தி திணிப்பை எதிர்த்து வைகோ பேச தொடங்கினார். அப்போது பாஜக எம்.பிக்கள் அவரை நோக்கி நீங்கள் யார்? என்று முழக்கமிட்டனர். அதற்கு பதில் அளித்த வைகோ, தனது பெயரை வைகோ என்று கூறி, தான் அறிஞர் அண்ணாவின் இயக்கத்தை சேர்ந்தவன் என்றும், திராவிட இனத்தை சேர்ந்தவன் என்றும் கர்ஜித்தார். நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா கர்ஜித்தார். அதுதான் இன்று உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அவையை நடத்திய மாநிலங்களவை துணைத்தலைவர், வைகோவின் மைக்கை ஆஃப் செய்துவிட்டார். காரணம் வெட்டி புதைப்போம் என்று வைகோ சொன்னார். மனிதர்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இந்தியை வெட்டிப் புதைப்போம் என்று நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சுக்கு, மற்றவர்கள் எல்லாம் அலறியே விட்டனர். “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”, என்று தொடங்கி அடித்து பிய்த்துவிட்டார் வைகோ. இந்தியை நீ திணித்தால், வெட்டிப் புதைப்போம் என்று அடிக்கிறார். இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்றால், இவர்கள் அனைவரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். இந்தியை எதிர்த்து சண்டை செய்தவர்கள்.
இன்றைக்கு இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து போய்விட்டன. அண்மையில் என்னிடம் மார்வாடி சகோதரர் ஒருவர் பேசினார். அவர் தங்கள் மார்வாடி மொழியே அழிந்துவிட்டதாகவும், அனைவரும் இந்தியை பேச தொடங்கி விட்டனர் என்றும் கூறினார். இன்றைக்கு அவர்களுடைய பிள்ளைகளுக்கு மார்வாடி மொழியே தெரியவில்லை. இப்படி ஒரு சூழல் தமிழுக்கு வந்துவிடும் என்று அபாயம். அதனால்தான் நம் கத்துகிறோம். இன்றைக்கு இந்த வயதிலும் சிங்கம் போன்று நின்று, வைகோ நாடாளுமன்றத்தில் நின்று சண்டை செய்கிறார் என்றால் எதற்காக?. ஆ.ராசா சண்டை செய்கிறார், எதற்காக? கனிமொழி சண்டை செய்கிறார், எதற்காக? தமிழச்சி தங்க பாண்டியன் நாடாளுமன்றத்தில் கொதித்து எழுந்தார். ஏன்? சு.வெங்கடேசன் அவ்வளவு தரவுகளை வைத்துக்கொண்டு பேசுகிறார் ஏன்?. தயாநிதி மாறன் கொந்தளிக்கிறார். 40 பேரும் சமோசா திண்பதற்காக செல்வதாக எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் 40 பேரும் சமோசா தின்பதற்காக செல்லவில்லை, அடித்து விரட்டி கொண்டிருக்கிறார்கள் எல்லோரும். திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவையில் கேட்கும் கேள்விக்கு யாரிடமாவது பதில் உள்ளதா? தமிழ்நாட்டில் இருந்துசென்ற ஒவ்வொரு எம்.பிக்களும் முத்துக்களை போன்று அடித்து விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு வைகோ பேச தொடங்கிய உடன் பாஜகவினர் ஆத்திரமடைந்து விட்டனர். எந்த இடத்தில் பாஜகவினர், வைகோ மீது கோபமடைந்தனர் என்றால்? “பிரதமர் எங்கே? அவர் மணிப்பூருக்கு செல்லமாட்டாரா? டூரிஸ்ட் கைடு போன்று உலகம் முழுவதும் சுற்றுகிறார். பி.எம். என்றால் பிரைம் மினிஸ்டர் என்று பொருள். ஆனால் இந்தியாவில் பி.எம். என்றால் பிக்னிக் மினிஸ்டர் ஆகும்” என்று வைகோ சொல்லி விட்டார். அப்போது, அரசியலமைப்பு சட்டப்படி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அவையின் துணைத்தலைவர் சொன்னார். அதற்கு ஒரு மசோதாவை குறிப்பிட்டு அப்படி பேசலாம் என்று வைகோ சொல்கிறார். தனக்கு சட்டம் தெரியும், 25 ஆண்டுகளாக தான் நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்தவன் என்று சொல்லி, மாநிலங்களவை துணை தலைவருக்கு சவால் விடுக்கிறார். மாநிலங்களவை துணைத் தலைவர் வைகோவின் பேச்சுக்கள் நாடாளுமன்ற அவை குறிப்பில் ஏறாது என்கிறார். அப்போது, நான் என்ன அன்பார்லிமெண்ட் வார்த்தைகளை பேசி விட்டேன்? என்று வைகோ கேள்வி எழுப்பினார். இவ்வாறு எந்த இடத்தில் நடைபெற்றது என்றால் பஜ்ரங் தள், இந்து மகாசபா போன்ற இந்துத்துவா அமைப்புகள் குறித்து வைகோ பேசியபோது, இதற்கும் சப்ஜெக்ட்டிற்கும் தொடர்பில்லை என்கிறார் மாநிலங்களவை துணைத் தலைவர். இதற்கும் சப்ஜெக்ட்டிற்கும் தொடர்பு உள்ளது என்று வைகோ சொல்கிறார்.
இன்றைக்கு ஏன் மக்களிடம் இதனை எடுத்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றால்? இன்றைக்கு எப்படியாவது இந்தியை வைத்து தமிழ்நாட்டில் சூறையாட பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மோசமான காலகட்டத்தில் தமிழ்நாட்டை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வந்தால் பாஜக, பாஜக ஆகவே இருக்காது. எப்படியாவது அவர்களுக்கு ஆட்சியை பிடித்தாக வேண்டும். நாடு முழுவதும் ஆட்சியை பிடித்து, மனுநீதியை கொண்டு வந்துவிட வேண்டும். இது மட்டும் தான் அவர்களது வெறியாகும். அதற்காக தமிழ்நாட்டில் என்ன அட்டூழியம் வேண்டும் என்றாலும் செய்வார்கள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், ஒருவேளை மோடியை, மோடியின் ஊழல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால்தான் தங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால், மோடிக்கு எதிராகவே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆம் அதன்படி இன்றைக்கு மோடியின் ஊழலை கண்டித்து தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.