spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!

வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!

-

- Advertisement -

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். அந்த கொம்பன் எஸ்.பி.வேலுமணி. பாஜக தான் அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் எடப்பாடி குறிப்பிடும் கொம்பன் எஸ்.பி.வேலுமணி. அவர் மூலம் கட்சியை உடைக்கப்பார்க்கிறார்கள். முக்குலத்தோர், கவுண்டர்கள் இணைந்து ஆதிதிராவிடர் முதுகெலும்பாக அமைந்த ஆட்சிதான் எம்.ஜி.ஆரின் அரசியல். காங்கிரசின் வாக்கு வங்கி அதுதான். அந்த வாக்கு வங்கிக்குள் தான் அவர் நுழைந்தார்.

அந்த வாக்கு வங்கியில் முக்குலத்தோரை தனியாக பிரித்து எடுத்தது பாஜக. மக்களவை தேர்தலில் அண்ணாமலை தலைமையில் முக்குலத்தோர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 18 சதவீத வாக்குகளை பெற்றது. எடப்பாடி தலைமையிலான அதிமுக கவுண்டர் + வன்னியர்களாக மாறி, 20 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது. ஆங்காங்கே முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த உதயகுமார், செல்லூர் ராஜு, தளவாய் சுந்தரம் போன்றவர்களை பெயரளவில் ஜெயிக்க வைத்தனர். 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தியதால் பிரமலைக்கள்ளர் போன்ற பெரும்பான்மை  முக்குலத்தோர் சமூகத்தினர் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, முக்குலத்தோர் இல்லாத கவுண்டர் அதிமுகவாக மாறிவிட்டது.

தற்பாது அந்த கவுண்டர்களுக்கு உள்ளேயே ஒரு ஆளை உருவாக்கி, அவர் மூலம் மற்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியை உடைக்க முயற்சிக்கிறார்கள். 25 எம்.எல்.ஏ-க்கள் வரை ரெடி பண்ணிஇ எஸ்.பி.வேலுமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி, அதை அமித்ஷா வாயால் சொல்ல வைக்க உள்ளனர். அமித்ஷாவை அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று சொல்ல வைத்தது எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர்தான். பாஜக, அதிமுகவை சுக்கு நூறாக உடைக்கலாம் என்று நினைக்கின்றனர். ராமதாஸ் – அன்புமணியை உடைத்தது போன்று, அதிமுகவையும் உடைத்துவிடலாம் என்று பார்க்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. அந்த சின்னத்தை முடக்க பாஜக நினைத்தால், அதை செய்ய முடியும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திற்கு தாக்கீது அனுப்பி உள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 40 இடங்களை கேட்கிறது. விஜய் கூட்டணிக்கு வருவார் என்று அமித்ஷா சொல்கிறார். விஜய் கேட்பது 50 தொகுதிகள். பாமக 15 இடங்களை கேட்கிறது. இதில் 115 தொகுதிகள் வருகிறது. அப்போது, அதிமுக 100 தொகுதிகளுக்கு கீழ்தான் நிற்க வேண்டும். அப்படி நின்றால் நிச்சயமாக கூட்டணி ஆட்சிதான். ஏனென்றால் 115 இடங்கள் அதிமுக வரவே வராது. இவைகள் தான் பாஜகவின் தேர்தல் கணக்குகள். இதை எதிர்த்து போராடுவது தான் எடப்பாடி. அதனால் தான் அதிமுக தனித்து ஆட்சியை பிடிக்கும் என்கிறார். வேலுமணி, பாஜகவுடன் மட்டும் தொடர்பில் இல்லை. திமுகவுடனும் ரகசிய தொடர்பில் உள்ளார். திமுக ஆட்சியை இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சிலரை சொல்வார்கள். அமலாக்கத்துறை அவர்களின் வீடுகளில் சோதனையிட முயன்றது. அந்த டீம்களை எல்லாம் வேலுமணி பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை தனியாக நடத்துகிறார். அவர்கள் எல்லாம் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்ததால் வேலுமணி அனைத்து இடங்களிலும் ஆட்களை வைத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி

எது எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என வேலுமணி நினைக்கிறார். பாஜக நீங்க சி.எம். ஆக கூட இருங்கள். நாங்க துணை முதலமைச்சராக இருக்கிறோம் என்கிறது. இது ஜக்கி வாசுதேவின் ஆஃபர் ஆகும். அவர் எடப்பாடி பழனிசாமியிடமும் பேசுகிறார். எடப்பாடியின் பொதுக் கூட்டங்களுக்கு வேலுமணி வருவதில்லை. அவர் கலகத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் வேலுமணி. அவர்களை எல்லாம் எதிர்காலத்தில் கட்சிக்குள் கொண்டு வருகிறார். அதிமுக உடையாமல் எடப்பாடி தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பமாகும். அப்போது தான் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியு என நினைக்கிறார்கள். யை கொண்டுவர பாஜக முயற்சித்தார்கள். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். பெரியாரை கொள்கை தலைவராக கொண்ட நாங்கள் எப்படி பாஜக உடன் செல்வோம் என்று சொல்கிறார்கள். பெரியாரை, சீமான் இழிவாக பேசியபோதும், முருகர் மாநாட்டில் பெரியார் – அண்ணாவை இழிவுபடுத்திய போதும் அவர் வாய் திறக்கவில்லை.

த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவது விஜய்க்கு, பாஜக கொடுத்த வேஷமாகும். அடுத்த டிராமா வருகிறபோது வேறு வேஷம் போட வேண்டும் அல்ல. தொடங்கும்போது ரஜினிக்கு மாற்றாக தான் விஜயை கொண்டு வந்தனர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் மூலமாக தான் அவரை அரசியலுக்கு கொண்டு வந்தனர். பெரியாரின் வாரிசு என்று சொல்லிவிட்டு பெரியார் திடலில் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு மாலையை வைத்துவிட்டு வந்தார் விஜய். விஜய் தனித்து நின்றார் என்றால் திமுக வெற்றி பெற்றுவிடும். அப்படி நடக்கக்கூடாது என்று விஜய் நினைக்கிறார். அப்போது அவர் பாஜக  – அதிமுக கூட்டணிக்கு தான் வர வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு அவர் கூட்டணிக்கு வருவார். அப்படி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதற்கிடையே, எடப்பாடியை மிரட்டுவதற்காக கூட்டணி ஆட்சி என்று சொல்வார்கள். இதற்கு பதிலடியாக எடப்பாடி உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் எந்த கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறார். அதிமுக மிகப்பெரிய குழப்பமான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சியை பிளந்து சுக்கு நூறு ஆக்குவதற்கு பாஜகவும் தயாராகி கொண்டிருக்கிறது. எப்படி உத்தவ் தாக்கரேவும் – ராஜ் தாக்கரேவும் இணைந்து குரல் கொடுத்த உடன் மகராஷ்டிரா அரசு பணிந்து மும்மொழி கொள்கை வேண்டாம் என்று சொன்னது. அவர்கள் இருவரும் இணையாமல் இருப்பது தான் பாஜகவுக்கு பலமாகும். இந்தியாவில் பாஜவின் அசைவு இல்லாமல் எதுவும் இனி நடைபெறாது. பாஜகவின் நகர்வு இல்லாமல் அரசியல் நடப்பதாக சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு அவரசியல் தெரியாது என்று அர்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ