Homeசெய்திகள்ஆன்மீகம்பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் - திருமலை திருப்பதி தேவஸ்தானம்

பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

-

- Advertisement -

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

பத்மாவதி தாயார் கோயில்.Goddess Padmavathi temple

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், சென்னை, தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

Actress Kanchana நடிகை காஞ்சனா

ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கோயில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில். இதனை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

Tirumala temple ,திருமலா கோயில்
அதே போல் தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வர்த்தகப் பகுதியான தி நகர், வெங்கட்நாராயணா சாலையில் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் தி நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் பெருமாளை தரிசிக்க கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு.

TTD , Venkatanaraya road ,திருப்பதி திருமலை தேவஸ்தான வெங்கட்நாராயணா சாலை
1960 – 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவருக்கு 84 வயது, திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார்.

இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர். உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார்.

Actress Kanchana,நடிகை காஞ்சனா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னையில் பத்மாவதி தாயாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலைக் கட்ட நீண்ட காலமாக விரும்பியது. இதையறிந்த நடிகை காஞ்சனா அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டுள்ளார்.

அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால்,
நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஜா பாண்டே, கர்நாடக மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சென்னையின் மையப்பகுதியில் உள்ள மதிப்புள்ள நிலத்தை டிடிடிக்கு வழங்க முடிவு செய்தனர்.

பின்னர் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தானத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது.

பத்மாவதி தாயார் கோயில்,Goddess Padmavathi temple

ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நன்கொடை பெறப்பட்டது.

பத்மாவதி தாயார் கோயில்,Goddess Padmavathi temple
இதனையடுத்து, கடந்த 22.02.2021 அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, மடபள்ளி வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மாவதி தாயார் ,Goddess Padmavathi

திருப்பதியை தவிர உலகத்தில் வேரு எங்குமே பத்மாவதி தாயாருக்கு என்று தனி கோவில் கிடையாது. அந்த வகையில் பாக்கியம் பெற்றது சென்னை மாநகரம்.

MUST READ