Homeசெய்திகள்ஆன்மீகம்திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு...

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

-

- Advertisement -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் குவிந்த திருமண ஜோடிகள். ஒரே நாளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் பரபரப்பான கோவில் வளாகம்.

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு...

we-r-hiring

தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.  தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலானோர் திருச்செந்தூர் முருகன் கோவில் வைத்து தங்களது வீடுகளில் நடக்கும் திருமணத்தை நடத்த ஆசைப்படுவார்கள். இதனால் முகூர்த்த தினங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்றைய தினம் சித்திரை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த தினத்தின்  முகூர்த்தம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அதிகாலை முதலை ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது. கோவில் முன்புள்ள சண்முக விலாச மண்டபத்தில் மணமகனின் உறவினர்கள், மணமகளின் உறவினர்கள் மற்றும் மணமக்கள் என ஏராளமான குவிந்து வருவதால் கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

திருமணத்தில் முக்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை மலர் தூவி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதனால் கோயில் வளாகத்தை சுற்றிலும் மணமக்கள் உறவினர்கள் அதிகமாக காணப்பட்டனர்.  கோவில் வளாகத்தை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

MUST READ