spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிசெங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது

செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது

-

- Advertisement -

செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் படி 13.12.2022 ஆம் தேதி செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் முனியசாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் TOURIST BAG கையில் வைத்து கொண்டு இருந்தவரை போலீசார் விசாரித்தனர்.

we-r-hiring

அப்போது அவன்  பெயர் சொனாஜி (22) திருவனந்தபுரம், கேரளா என்று தெரிய வந்தது. மேற்படி சொனாஜி கையில் வைத்திருந்த TOURIST BAG – ல் கஞ்சா எனும் போதை பொருள் இருப்பதாகவும் அதனை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அதை திருவனந்தபுரத்திற்க்கு எடுத்து சென்று விற்கபோவதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் சுமார் 20 கிலோ கஞ்சா என்னும் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

MUST READ