Homeசெய்திகள்ஆவடிஆவடியில் கோலாகலமாகத் தொடங்கியது "இந்திய பாதுகாப்பு உற்பத்தி மாநாடு 2026": ஆவடியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

ஆவடியில் கோலாகலமாகத் தொடங்கியது “இந்திய பாதுகாப்பு உற்பத்தி மாநாடு 2026”: ஆவடியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

-

- Advertisement -

பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாளாக மாற்றும் லட்சியத்துடன், “இந்திய பாதுகாப்பு உற்பத்தி மாநாடு 2026” (Indian Defence Manufacturing Conclave 2026) சென்னை ஆவடியில் உள்ள விஜயந்தா மைதானத்தில் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.

we-r-hiring

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் ஆர்மர்டு வெஹிகல்ஸ் நிகாம் லிமிடெட் (AVNL) நிறுவனமும், இந்திய தொழிலக்கூட்டமைப்பும் (CII) இணைந்து இந்த மாநாட்டைப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன.

மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:

செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (DPSU) தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

AVNL நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு. சத்தியப்ரதா முகர்ஜி தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் AVNL நிதி இயக்குநர் திரு. ராஜீவ் குமார் சர்மா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

‘ஆத்மநிர்பார் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது மற்றும் அதிநவீனக் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

* உதிரிபாகங்கள் கண்காட்சி: நாட்டின் முன்னணி பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் அதிநவீன உதிரிபாகங்கள், அடுத்த தலைமுறைக்கான இயந்திரங்கள் மற்றும் மேம்பட்ட பொருட்கள் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* தலைவர்கள் கருத்தரங்கம்: பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் பங்கேற்கும் சிறப்பு விவாதங்கள், உரைகள் மற்றும் நிலையான உற்பத்தி முறைகள் குறித்த ஆலோசனைகள் இதில் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் பாதுகாப்புத் உற்பத்தியில் சுயசார்பை ஊக்குவிப்பதும், உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த மாநாட்டின் முதன்மை இலக்காகும்.

ஆவடி அருகே பரபரப்பு: ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்!

MUST READ