ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 80-வது சுதந்திர தின விழா, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றமும் அணிவகுப்பு மரியாதையும்
விழாவிற்கு வருகை தந்த ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் IPS, காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டார்.

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ்
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி முத்திரை பதித்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்குக் காவல் ஆணையர் நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு வண்ணமயமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
இவ்விழாவில் இணை ஆணையர், காவல் துணை ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் IPS தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
