Homeசெய்திகள்ஆவடிவாரிசு சான்று வழங்க ₹8,000 லஞ்சம்.. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கையும் களவுமாக கைது!

வாரிசு சான்று வழங்க ₹8,000 லஞ்சம்.. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கையும் களவுமாக கைது!

-

- Advertisement -

ஆவடி அருகே வாரிசு சான்று வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

we-r-hiring

ஆவடி அடுத்த கோவில்பதாகை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்தச் சான்றிதழை வழங்குவதற்காகக் கோவில்பதாகை கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் அவரது உதவியாளர் ரவி ஆகிய இருவரும் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கர், இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைச் சங்கரிடம் கொடுத்து அனுப்பினர். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் உதவியாளர் ரவியிடம் சங்கர் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி அருகே பரபரப்பு: ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்!

MUST READ