Homeசெய்திகள்ஆவடிலஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

-

- Advertisement -

சென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் கிழக்கு பகுதியில் பாபு சிங் என்பவர்  பிளாஸ்டிக் மற்றும் எசன்ஸ் பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதி  இவரின் கடைக்கு வந்த மூன்று பேர் தாங்கள் கடையில் மாசு கட்டுப்பாட்டு துறையில் இருந்து வருவதாகவும் ஆளுக்கு ரூ. 1000 என்று 3000 ரூபாய் லஞ்சம் கொடு கேட்டுள்ளனர்.  பாபு சிங் லஞ்சம் கொடுக்க மறுத்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்படும் என மிரட்டல் விட்டனர்.

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

பாபு சிங் லஞ்சம்  லஞ்சம் கொடுக்க முடியாது என கூறவேகடைக்கு வந்த சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வும் செய்யாமல் பாபு சிங்கின் கடையை இழுத்து பூட்டி சீல் வைத்து சென்றனர். செய்வது அறியாத திகைத்த பாபு சிங் அம்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழில் பாதிப்பு அடைவதாக மீண்டும் கடையை திறக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களாலும் மற்றும் வருவாய்த்றையினராலும் மிகவும் மிரட்ட படுவதாகவும் இதுபோன்று லஞ்சம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும் அப்பகுதி கடை உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

வியாபாரியை அதிகாரிகள் மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ