காவலர்களின் நீத்தார் நினைவு நாள் முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர்களின் நீர்த்தார் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி 21.10.2024 காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும்
அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
MRTS X R.K.SalaiJn ஐத் தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. காவலர்களின் நீர்த்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை காமராஜர்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் MTC பேருந்து (21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் மியூசிக் அகாடமி பாயின்ட் TTK சாலை இந்தியன் வங்கி Jn பாயிண்ட் அடையலாம். ராயப்பேட்டை நெடுஞ்சாலை GRH அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
கதீட்ரல் ரோடு லைட் ஹவுஸ் நோக்கி வரும் MTC பேருந்து (27D) V.M தெருவில் திருப்பிவிடப்பட்டு லஸ் சந்திப்பு லஸ் சர்ச் சாலை ஸ்லிவா சாலை D’ பக்த்வச்சலம் சாலை Dr.ரங்கா சாலை பீமனா கார்டன் Jn CP ராமசாமி சாலை சீனிவாசன் தெரு R.K மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும்
அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.