சென்னை மணலியில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தியா என்ற பெயரில் 18 அடி உயரத்தில் 5000 பிஸ்கெட்டில் தத்ரூபமாக செய்யப்பட்ட சுதந்திர விநாயகர் சிலை.
சென்னை மணலி சின்னசேக்காடு, காந்திநகர் பகுதியில் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 அடி உயரத்தில் 15அடி அகலத்தில் 5000 பிஸ்கட்டில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வகையில் சுதந்திர விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.
ஒற்றுமை,மனித,நேயம்,மக்களாட்சி வலியுறுத்தும் வகையில் சுதந்திர விநாயகர் இந்தியா என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டதை நினைவு கூறும் வகையில் கேரட் முள்ளங்கி, வெள்ளரிக்காய் பச்சை சிவப்பு வெள்ளை நிறத்தில் காய்கறிகளால் சந்திராயன் ராக்கெட் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது திரைக்கு வந்த ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பரங்கிக்காய் மூலம் விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.முன்னதாக சர்வ மங்கள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் யாகம் ஓமம் செய்யப்பட்டது.பின்னர் மணலி மண்டல குழு தலைவர் ஏ. வி. ஆறுமுகம் விநாயகர் சிலையை திறந்து வைத்து பிஸ்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனையடுத்து வரும் சனிக்கிழமை அன்று ஐந்தாயிரம் பிஸ்கட்களை பிரித்து பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக கோவில் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.கடந்த ஒரு மாதகாலமாக 7 பேர் 5000 பிஸ்கெட் விநாயகர் சிலை செய்துள்ளனர். ஆண்டுதோறும் மணலியில் ஸ்கெட்ச் பென் விநாயகர் ,டம்ளர் விநாயகர் என வடிவமைத்து இந்த ஆண்டு பிஸ்கட் விநாயகர் வைத்துள்ளனர்.