சென்னை மெட்ரோ ரயிலி ல் நாளொன்றுக்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்யும் நிலையில், மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டபோது அமைக்கப்பட்ட கழிப்பறை வசதிகளே தற்போது வரை நீடிப்பதாகவும், அதிகபட்சமாக ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இரண்டு முதல் 5 கழிப்பறைகள் மட்டுமே இருப்பதாகவும் மெட்ரோ பயணிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
கடந்த ஜூலை மாதம் 95.35 லட்சம் பயணிகளை ஈர்த்து மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், அடிப்படை வசதியான கழிப்பறையை மேம்படுத்தாது ஏன் என்று கேள்வியையும் எழுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை வசதியின் புள்ளி விவரங்களோடு விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!
சென்னை மாநகருக்கு 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்தது. பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்களுக்கும், அன்றாட பயனாளர்களுக்கும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், ஆலந்தூர் என சென்னையின் முக்கிய இடங்கள் உட்பட 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெட்ரோ தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து குறைவான எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணித்து வந்த நிலையில் , தற்போது நாளொன்றுக்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோரும், அதுவே மாதத்திற்கு ஒரு கோடி என்ற அளவிலும் சென்னையின் முக்கிய மற்றும் நம்பிக்கை போக்குவரத்தாக சென்னை மெட்ரோ ரயில் மாறியுள்ளது.
இந்நிலையில் சென்னை நிலையங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. பயன்பாட்டில் உள்ள மெட்ரோ வழித்தடங்களில் மொத்தம் 41 ரயில் நிலையங்கள் உள்ளது அதில் குறைந்தபட்சமாக மூன்று முதல் ஐந்து பேர் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை வசதிகளே உள்ளதாகவும், அடிப்படை வசதியான கழிப்பறைகள் போதுமானதாக இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
(சென்னையில் முதற்கட்டமாக நடைமுறையில் உள்ள 41 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை வசதிகளை கிராபிக்ஸ் கார்டில் பயன்படுத்தவும்)
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் உள்ள நீல வழித்தடத்தில் மொத்தம் 24 ரயில் நிலையங்கள் உள்ளது அதில் அதிகபட்சமாக மீனம்பாக்கம், சின்னமலை, புதிய வண்ணாரப்பேட்டை, டோல்கேட், திருவொற்றியூர் உள்ளிட்ட எட்டு ரயில் நிலையங்களில் மட்டும் இரண்டு இடங்களில் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 ரயில் நிலையங்களில் ஒரு இடத்தில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளது.
இதே போல சென்னை சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பச்சை வழித்தடத்தில் அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று இடங்களிலும் ஆலந்தூர் மற்றும் செயிண்ட் தாமஸ் மவுண்டில் இரண்டு இடங்களிலும் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளது மீதமுள்ள 14 இடங்களில் ஒரே இடத்தில் மட்டுமே கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு வழித்தடங்களிலும் உள்ள 41 ரயில் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இரண்டு முதல் அதிகபட்சமாக ஐந்து பேர் பயன்படுத்தும் வகையில் மட்டும் தான் கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அதிகம் பயணிக்கும் Peak hours-ல் கழிப்பறைக்கு வெளியில் பல மணிநேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விரைவான பயணத்திற்கான புது போக்குவரத்தாக மெட்ரோ ரயில் இருந்தாலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், திருமங்கலம், ஆலந்தூர், விமான நிலையம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆவது பயணிகளுக்கு ஏற்ப கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே வழக்கமான பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை உள்ளிட்ட பல வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளை செயல்படுத்தும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இது போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது சன் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் முகேஷ் உடன் செய்தியாளர் விஷ்ணு தங்கவேல்.