திருக்குறள் திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது அவர் திருவள்ளூவருக்கு செய்யும் சிறப்பாக அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் திருக்குறள் திரைப்படத்தை பார்த்த பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் படம் ஒட்டுமொத்தமாக இளையராஜாவின் இசையால் உயிர்ப்போடு இருக்கிறது. இந்தக் காலத்திற்கு ஏற்ப திருக்குறளில் உள்ள கருப்பொருளை உருவாக்கி அதன் மூலம் சமுதாயத்திற்கு படத்தினை தந்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது அவர் திருவள்ளூவருக்கு செய்யும் சிறப்பாக அமையும்.
திருக்குறளின் முக்கியத்துவம் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் பதிவாகி இருக்கிறது. ஆணவக் கொலை அதிகரித்து வரும் நிலையில், காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள சூழலில், காதல் எவ்வளவு புனிதமானது, அதிலும் உடன் போக்கு எவ்வளவு முக்கியமானது. அது நியாயமானது அறம் சார்ந்தது என்ற கருத்தை இந்த படத்தில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். திருக்குறளில் உள்ள கருத்துக்களை வைத்து ஏராளமான திரைப்படங்கள் தயாரிக்க முடியும்.

எந்த வகையிலான கல் உள்ளிட்ட போதை பொருளையும் அரசு அங்கீகரிக்க கூடாது. அரசியல் களத்தில் மக்களுக்காக பணியாற்றும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றார்.
கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…