spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!

-

- Advertisement -

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்று  மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கம்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பதற்கான எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தேர்தல் பணிக்கான அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

we-r-hiring

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் கட்ட சரிபார்ப்பு பணிகளும் தொடங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி (விவிபேட்) உள்ளிட்ட  மின்னணு வாக்கு எந்திரங்கள் சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் உள்ளது. இந்த கிடங்கை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.

இது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று தொடங்கியுள்ள இந்த பணிகள் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என்றும் தினந்தோறும் 250,300 இயந்திரங்கள் எடுத்து சரிபார்க்கக்கூடிய பணிகள் நடைபெறும் என்றார்.

இரண்டு மூன்று குழுக்கள் மூன்று முறைகள் முழுமையான சோதனை செய்யப்படும். இந்த பணிகளில் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கிடங்கில்  சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. டிவிபேட், கண்ட்ரோல் யூனிட் ஆகியவும் உள்ளன. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தகவல்கள் அனைத்தும் டெலிட் செய்வது இயந்திரங்கள் எதுவும் பழுதடைந்து இருக்கிறதா, உடைந்து இருக்கிறதா உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படும் என்றார்.

மேலும், அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே கேமரா கொண்டு செல்ல முடியாது. கட்சியினர் மற்றும் அதிகாரிகள் யாரும் போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. மூன்று அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்கள் மெதுவாகவே பணிகள் நடைபெறும் என்றும் அதை தொடர்ந்து விரைவாக ஒரு மாதத்திற்குள்ளாக இந்த முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் செய்யப்படும் என்று குமரகுருபரன் கூறினார்.

இந்த பணிகள் காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரைக்கும் தினந்தோறும் நடைபெறுகிறது. எஸ்ஐஆர் பணிகளை பொறுத்தவரை  விண்ணப்பங்கள் 99.8 சதவீதம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் 70 சதவீதம் விண்ணப்பங்கள்  திரும்ப பெறப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்கள் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கிடங்கு என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து பணிகள் மேற்றகொள்ள வரக்கூடிய பணியாளர்களுக்கும் உரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. செல்போன் உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகளை கண்காணிக்கும் விதமாக தி.மு.க,வி.சி.க,பா.ஜ.க உட்பட உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதற்கட்டமாக இந்த பணிகள் முடிந்ததற்கு பின்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் அதை நாங்கள் முன்வைப்போம் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

MUST READ