நான்காவது நாட்களாக நீடித்து வந்த துறைமுக கண்டைனர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95 சதவீதம் வாகனங்கள் ஓடாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒரு சில சங்கங்கள் 5% கண்டைனர் லாரிகளை இயக்கி வந்தனர். வாகனங்களை புதுப்பிக்கும் எப்.சி கட்டணத்தை பழைய கட்டணத்தை விட 850 இருந்ததை பன்மடங்கு உயர்த்தி 28 ஆயிரம் ரூபாய் உயர்த்திருப்பதை திரும்ப பெற வேண்டும்.
ஆன்லைன் வழக்குகளை சரி பார்த்து அதில் உள்ள குற்றங்களையும் குறைகளையும் உடனடியாக களைய வேண்டும். டீசல் விற்பனையை ஜிஎஸ்டிகள் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி விற்பனைக்கு கொண்டு வந்தால் லிட்டருக்கு 20 ரூபாய் குறையும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாட்களாக நீடித்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாக டாரஸ் ட்ரெய்லர் கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
உயர்த்தப்பட்ட FC கட்டணத்தை நிரந்தரமாக நீக்க கோரி நீதிமன்றத்தில் டிச. 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலையில் தடைகோரி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
மத்தியமாநில அரசுகள் சட்ட ரீதியான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து, கட்டண உயா்வை நிரந்தரமாக நீக்கும் வரை பல்வேறு அழுத்தங்கள் தொடா்ந்து கொடுக்கப்படும். இதன் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கப்படுவதால், தற்போது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
சங்கத்தின் சார்பாக அடுத்த அறிவிப்புகள் வரும் வரை அனைவரும் வாகனங்களை இயக்கிக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளிவந்துள்ளது.
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்


