நில உரிமையாளரிடம் ரூபாய்.75,000 லஞ்சமாக பெற்ற நில எடுப்பு தாசில்தாா் மற்றும் இடைத்தரகா்களை லஞ்ச ஓழிப்புத் துறை போலீசாா் கைது செய்தனா்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மாவட்டமாக திருவள்ளூா் காணப்பட்டு வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைப் பெற்று வருகிறது. இந்நிலையில் எண்ணூா் முதல் மாமல்லபுரம் வரை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் விதமாக திருவள்ளூாில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன். அதற்கான நிலம் கையகப்படுத்தும் வேலையும் நடைபெற்று வருதோடு, இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, போளிவாக்கம் பகுதியில் வேல்யூ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு ரூ.45 இலட்சம் இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையை பெற அந்த நிறுவனத்தின் மேலாளா் ஆஸ்டின் ஜோசப் , நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் விலசனை தொடர்பு கொண்டனர். ரூ.1 இலட்சம் இலஞ்சம் கொடுத்தால் தான் இழப்பீட்டு தொகையை தருவதாக தாசில்தார் கூறியுள்ளார்.இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பம் இல்லாத ஆஸ்டின் ஜோசப் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாாிகளை சந்தித்து அளித்த புகாரின் அடிப்படையில் ரூ.75 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு, தாசில்தாரின் இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதி விநாயகம் மற்றும் துரை ஆகியோர் மூலம் எட்வர்ட் வில்சனிடம் பணம் கொடுக்கப்பட்டது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்ததுடன், லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அரசு கையப்படுத்திய நிலத்திற்கு இதுவரை எவ்வளவு லஞ்சம் வாங்கினாா்கள் என்றும் லஞ்ச ஒழிப்பு துறையினா் மூன்று போிடம் பல்வேறு கோணங்களில் விசாாித்து வருகின்றனா். எட்வர்ட் வில்சன் மற்றும் அவருக்கு இடைத்தரகா்களாக செயல்பட்ட கோமதி நாயகம், வெள்ளத்துரை ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.