கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு “கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும் உற்சாகம் வந்துவிடும் புத்துணர்ச்சி வந்துவிடும் என்று முதல்வர் உரையாற்றினாா். அதில் “கொளத்தூர் மட்டுமல்ல எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம். 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி,” என்று கூறினாா்.
மேலும் “எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான். பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும், அதனால் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். மனைவி சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண்கள் தான் உள்ளனர். “எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்“ ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண்கள் தான் உள்ளனர் என்று திருமண வாழ்வில் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.
நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்



