- Advertisement -
இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி லாரி மோதி பலியானாா். மற்றொரு மாணவி படு காயத்துடன் உயிர் தப்பினாா்.
சென்னை, பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருந்ததி. இவர் திருவேற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இன்று வழக்கம் போல் அவரது சகதோழி பர்ஹானுடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளனர். வாகனத்தை பர்ஹான் ஓட்டியுள்ளார். இருவரும் கரையான் சாவடியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மாணவி அருந்ததி லாரி டயரில் சிக்கி நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில் பர்ஹான் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அலுவல் நேரத்தில் கனரக வாகனம் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.


