spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தகுதி நீக்க தீர்மானம் – சபாநாயகரிடம் வழங்கவுள்ள தி.மு.க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தகுதி நீக்க தீர்மானம் – சபாநாயகரிடம் வழங்கவுள்ள தி.மு.க

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸை தி.மு.க மக்களவை சபாநாயகரிடம் வழங்குகிறது.திபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தகுதி நீக்க தீர்மானம் – சபாநாயகரிடம் வழங்கவுள்ள தி.மு.க திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பை சீர்குலைப்பதாகயுள்ளதாக விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்து வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க சார்பில் இன்று நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸை மேற்கொள்ள, மக்களவையில் தீர்மானம் கொண்டு வர 100 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும், அதேபோல மாநிலங்களவையில் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வர 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் கையெழுத்து வேண்டும். அந்த அடிப்படையில் தி.மு.க சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

அந்த கையெழுத்துக்களுடன் மக்களவை சபாநாயகரிடம் தி.மு.க சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டவுள்ளது. இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸ் தி.மு.க சார்பில் வழங்கப்படவுள்ளது.  அவ்வாறு வழங்கப்படும் பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸ் பரிசீலனை செய்த முவெடுப்பது என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

ஓபிஎஸ் டிமாண்ட் ஏறிடுச்சு! அமித்ஷா இதை எதிர்பார்க்கல! டெல்லி டீல் ரகசியம்! உமாபதி நேர்காணல்!

we-r-hiring

MUST READ