செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் பாஜக, ஓபிஎஸ்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்கும் விதமாக அவரை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ், அமித்ஷா சந்திப்பின் பின்னணி மற்றும் அதில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறித்து பேசிய ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அவரிடம் பேசப்பட்டதாக கூறியுள்ளார். கட்சியை ஒருங்கிணைக்கிறேன் என்கிற பெயரில் உடைக்க செங்கோட்டையன் முயற்சி செய்தார். அதற்கு பாஜக தரப்பில் கிரீன் சிக்னல் கொடுத்து அழைத்து பேசியும் விட்டார்கள். ஆனால் தாமதம் செய்து கொண்டிருந்ததால் திடீரென செங்கோட்டையன் விஜய் கட்சியில் போய் சேர்ந்து விட்டார். இதனை வைத்து ஓபிஎஸ் மாற்றுக்கட்சிக்கு செல்வதாக மிரட்டல் விடுத்த சூழலில், டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமித்ஷா உடனான பேச்சுவார்த்தையின்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விகாரம் குறித்து பேசப்பட்டு உள்ளது. அவர் ஜனவரி மாதம் வரை காத்திருக்கும்படி கூறியுள்ளார்.இந்த சந்திப்பின் பின்னணியில் தமிழ்நாட்டின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளது உண்மைதான். மோடியுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அவர்கள் மூலமாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாஜக தரப்பில் செங்கோட்டையனை எதிர்பார்த்த நிலையில் அவர் தவெகவுக்கு சென்றுவிட்டார். அதனால் ஓபிஎஸ்-யும் வெளியே சென்றால் பிரச்சினையாகிவிடும் என ஓபிஎஸ்-ஐ அழைத்து பேசியுள்ளனர்.

அமித்ஷா அழைப்பின் பேரில் தான் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றார். எடப்பாடி அணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பொன்னையன், தம்பிதுரை போன்ற மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஓபிஎஸ் சந்திப்பின்போது ஆடிட்டர் குருமூர்த்தியும் உடனிருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார். டெல்லியில் மோடி, அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசியிருக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் அண்ணாமலை குறித்த பழைய வீடியோக்கள் அவரது ஆதரவாளர்கள் பகிரப்பட்டு வருகிறது.
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் இணைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கடைசியில் கட்சியை ஒருங்கிணைக்கிறேன் என்ற பெயரில் பிரிந்தவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துவிடுவார்கள். அல்லது எடப்பாடியை தூக்கி வெளியே போட்டுவிடுவார்கள். அவரால் கட்சி நாளக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணிக்கும் ஆட்களை காணாம்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டுகிறோம் என்று எப்படியாவது காரணத்தை சொல்லி ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்த்து விட வேண்டும் என்று சொல்லி இருகிறார்கள். தினகரனை கூட என்டிஏ கூட்டணியில் சேர்த்து, அவருக்கு பாஜக மூலம் சீட்டு வழங்கலாம் என்று கூறியுள்ளனர். அதேநேரத்தில் தினகரனுக்கு, தவெகவில் தொகுதி பங்கீடு வரை பேசிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு எது லாபமோ அதைதான் தினகரன் தேர்வு செய்வார். தவெகவில் அதிக இடங்கள் கிடைத்து, வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அவர் தவெக கூட்டணியில் தான் இருப்பார்.
அன்புமணியை பொருத்தவரை அவர் பாஜக கூட்டணியில் உள்ளார். மாம்பழ சின்னம் விவகாரத்தில், அதை மருத்துவர் ராமதாசுக்க அதை கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். புதிய சின்னத்தில் போட்டியிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். அதிமுக தற்போது டெல்லி மேலிடம் சொல்வதை தான் கேட்கும். அவர்கள் யாரை சேர்க்க சொல்கிறார்களோ, அவர்களை கட்சிக்குள் சேர்ப்பார்கள். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுகவுக்கு பெரிய அடி கிடையாது. ஆனால் அது அதிமுகவுக்கு பலவீனமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்


