spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

-

- Advertisement -

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

we-r-hiring

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் லைசன்ஸ் பெறவில்லை என தெரியவந்துள்ளது. ஏன் லைசென்ஸ் பெறவில்லை எனக்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இணக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வழங்கி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. இது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் உரிய உத்தரவு தெளிவான வழிக்காட்டுதல் பெற சென்னை மாநகராட்சி முயற்சி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

நாய் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட 23 வகையான நாய்களை சென்னையில் வளர்ப்பவர்கள் கண்டறியவும், பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/higher-proficiency-in-science-subject/83194

சட்டங்களும் விதிமுறைகளும் பிராணிகளுக்கு சாதகமாகவே உள்ளது. இது போன்ற அசாதரண சம்பவங்களை சுட்டிக்காட்டி உரிய விதிமுறைகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

MUST READ