Homeசெய்திகள்தமிழ்நாடுஅறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

-

+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.

இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல் பாட பிரிவில் 92.46% பேர், கலைப்பிரிவுகளில் 85.67%, தொழில் பாட பிரிவுகளில் 85.85% பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.

அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

பாடவாரியாக இயற்பியல் பாடத்தில் 98.48%, வேதியல் பாடத்தில் 99.14%, உயிரியல் பாடத்தில் 99.35% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 98.5 7%, தாவரவியல் பாடத்தில் 98.86%, விலங்கியல் பாடத்தில் 99.04%, கணினி அறிவியல் பாடத்தில் 99.80%, வணிகவியல் பாடத்தில் 97.77%, கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

 

அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6142 பேரும், பொருளியல் பாடத்தில் 3299 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றனர்.

கணித பாடத்தில் 2587, கணினி பயன்பாடுகளில் 2251, கணக்குப் பதிவியல் பாடத்தில் 1647 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளன.

அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

உயிரியல் பாடத்தில் 652 பேர், வேதியியல் பாடத்தில் 471 பேர், விலங்குகளில் 382 பேர், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 210 பேர், தாவரவியலில் 90 பேர், தமிழில் 35 பேர், ஆங்கிலத்தில் 7 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளன.

MUST READ