Homeசெய்திகள்சென்னைசென்னையில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி

சென்னையில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி

-

சென்னையில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி

சென்னை கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

தாயுடன் 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்திகள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

MUST READ