Homeசெய்திகள்சென்னைராட்வீலர் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு இன்று மதியம் 1மணிக்கு அறுவை சிகிச்சை

ராட்வீலர் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு இன்று மதியம் 1மணிக்கு அறுவை சிகிச்சை

-

ராட்வீலர் நாய் கடித்து உயிருக்கே ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மதியம் 1மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் தலையில் படுகாயத்துடன் சிறுமி உயிருக்கே ஆபத்தான நிலையில் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.A girl bitten by a Rottweiler dog

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் .

சிறுமியை காப்பாற்ற முயன்ற தாயையும் நாய்கள் கடித்துக் குதறியதில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது தாய் நலமுடன் உள்ளார், இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையின் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மதியம் 1 மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது .

5 வயது சிறுமி

நாய்கள் கடித்ததில் ராபிஸ் நோய் பாதிப்பு சிறுமிக்கு ஏற்படாமல் இருக்க தேவையான ANTI VIRAL மருந்துகள் தொடர்ச்சியாக சிறுமிக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து தனியார் மருத்துவமனையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள  மருத்துவக் குழுவினர் சிறுமியின் உடல்நலத்தை கண்காணித்து வருகின்றனர்.

MUST READ