Homeசெய்திகள்சென்னைமிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

-

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அறிவிப்பு !!தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு 

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

தமிழக காவல்துறை சார்பில் பேரிடர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர், என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், பேரிடர் மேலாண்மை குழுவினரை சந்தித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, மீட்பு பணி உபகரணங்களை  பார்வையிட்டார்.

அந்த மீட்பு குழுவில் மொத்தம் 120 பேர் உள்ளனர்.  இவர்களுக்கு நீச்சல் பயற்சி, தண்ணீரில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, பைப்பர் ஃபோட் எப்படி இயக்குவது உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது். ஒரு குழுவில் 10 பேர் இருப்பார்கள். 12 குழுவாக பிரிக்கப்பட்டு, 3 மண்டலங்களுக்கு பிரித்து அனுப்ப உள்ளனர்.

பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,தமிழகத்தில் ஏற்கனவே தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உள்ள் நிலையில் கூடுதலாக காவல் துறை சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.12 மாவட்டங்களில் 18 ஆயிரம் காவலர்கள் பணியில் உள்ளனர்.இந்த சிறப்பு காவலர்கள் ஏற்கனவே பயிற்சி பெறப்பட்ட பேரிடர் குழுவினர் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைப்படி வழி நடத்தப்படுவார்கள்.சென்னையில் உள்ள காவல் மருத்துவமனையில், ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சென்னை வாசிகளுக்கு மருத்துவம் தேவைப்பட்டால் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் காவல் கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதற்கான ஒரு துணை ஆணையர் நியமித்து பணியை கண்காணிக்க நியமிக்கப்பட மருத்துவர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக  மக்களுக்கு அளிக்க  தயாராக இருக்கிறார்கள்.

இந்த பேரிடர் காலத்தில் ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய வழி தடங்களை பச்சை வழித்தடமாக மாற்றுவதற்கான பணியில் காவலர்கள் ஈடுபட ஏற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,100 என்ற எண்ணை பேரிடர் காலத்தில் அழைக்கலாம்.பொதுமக்கள் பேரிடர்களில் சிக்கிக் கொண்டால் உடனடியாக 044 23452437 அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு  தகவல் தெரிவித்தால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

MUST READ