spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மேம்பாட்டு மையம்

சென்னையில் அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மேம்பாட்டு மையம்

-

- Advertisement -

சென்னையில் அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மேம்பாட்டு மையம்

புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் சென்னையில் தனது திறன் மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.

we-r-hiring

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அடிடாஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மேற்கொண்டது.

குறிப்பாக, உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்துள்ளது.

சீனாவுக்கு வெளியே ஆசியாவிலேயே முதல் மையம் இதுவாகும். இந்த மையம் இனி உலகம் முழுக்க அடிடாஸ் காலணிகளை ஏற்றுமதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிடாஸ் நிறுவனம் தனது Global capacity center ஐ சென்னையில் அமைத்துள்ளது.

போர்ச்சுகல்,  சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மையங்களுடன் இணைந்து இந்த மையம் செயல்படும் என தெரிவித்துள்ளது.

காலணி மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக (R&D) இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ