spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுயல் எதிரொலி : அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..

புயல் எதிரொலி : அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..

-

- Advertisement -
மிக்ஜம் புயல்
கனமழை எச்சரிக்கை காரணமாக திங்கள் கிழமை நடைபெற இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மிக்ஜம் புயல் எதிரொலியால் தமிழகத்திற்கு அடுத்த 3 தினங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி திங்கள் கிழமை ( நாளை ) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது.

Madras University -  சென்னை பல்கலைக்கழகம்

we-r-hiring

அதேபோல், நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த நவ.30ம் தேதி கனமழை காரணமாக சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ