Homeசெய்திகள்சென்னைபாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி

பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி

-

பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி
சென்னை எழும்பூர்

வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும். பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பேட்டி

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள 600 மரங்களை வெட்ட முடிவெடுத்துள்ளதை கண்டித்து பசுமை தாயகம் எனும் பெயரில் பாமக சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வெட்டப்பட்ட அனைத்து மரங்களுக்கும் பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் கோஷங்களைய எழுப்பி அஞ்சலி செலுத்தபட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய ஏ.கே.மூர்த்தி கூறுகையில், சென்னை எழும்பூர் மெட்ரோ நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில் இப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி நவீனப்படுத்த வேண்டும் என்று எண்ணி ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதை எங்கள் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பசுமை தாயகம் சார்பாக பாமக நிறுவனர் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி
பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

இதைத்தான் உயர்நீதிமன்றமும்  ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரத்தை நட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இங்கு வெட்டப்பட உள்ள 600 மரங்களுக்கு பதிலாக 6 ஆயிரம் மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும்  நகர்புற மரங்கள் காப்பதற்காக சிறப்பு திட்டத்தை தமிழக அரசு ஏற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சாலைகளை அகலப்படுத்துவது போன்ற வேலைகளுக்காக சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி இருக்கிறார்கள்.

இதை வன்மையாக கண்டிக்கின்றோம். இங்கு வெட்டப்பட உள்ள மரங்களை  எடுத்துச் சென்று மாநகராட்சி பள்ளிகளிலும் அல்லது இடுகாடுகளிலும் மாற்றி நட்டு வைக்குமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும் என தெரிவித்தார்.

MUST READ