spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை

ஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது – போக்குவரத்துத்துறை

-

- Advertisement -

ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் சில இடங்களில் நடத்துநர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.

மத்திய பணிமனையில் கடந்த 28ம் தேதி நடத்துநர் ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்த டீசல் பங்கினை இடித்து சேதப்படுத்தியுள்ளது அதனை உறுதி செய்கிறது

எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கிளை மேலாளர்கள் மற்றும் பணிமனையில் உள்ள மேற்பார்வையாளர்கள் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Home

ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவருக்கும் தெரியும் வகையில் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மாநகரப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

MUST READ