வடகிழக்கு பருவமழை வரும் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில் மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவுபெறாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவுபெறாததால் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் கிடக்கின்றன.
இந்நிலையில்
சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களின் சேரும் , சகதிகளும் அகற்றப்படாமல் விடப்பட்டதால் காலையில் பெய்த மழைத் தண்ணீரோடு கலந்து சாலை முழுவதும் சகதி பரவி உள்ளதால் வாகனவோட்டிகளும் நடந்து செல்லும் மாணவர்களும், முதியவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் திறந்தே கிடப்பதாகவும், தொடர் மழை துவங்கும் முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர், சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் இந்த நிலையா என்று பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.