spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்

-

- Advertisement -

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்:

பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை நடைமுறை படுத்தாமல் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் ரசாயன கழிவுகளை ஏரியில் விடுவதை கண்டித்து மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது.

we-r-hiring

அம்பத்தூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணி-80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மூதாட்டியை தூக்கி கொண்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றினார்.ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாமல் இருந்ததால் சிறிது நேரம் காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது, தற்போது மூதாட்டி முதலுதவிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்:

மேலும் போராட்டக்காரர்கள் அம்பத்தூர் மண்டல தலைவர் பி.கே.மூர்த்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்களுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சமூக ஆர்வலர் மானிடமனம் சேகரன் பேசியது:

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்

மண்டல குழு தலைவர்கள் மற்றும் இரு பொறியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இனி வரும் காலங்களில் கழிவு நீர் திறந்து விடாமலும் கனமழை காலங்களில் மட்டும் திறந்து விடுவதாகவும் பேச்சுவார்த்தை உறுதி கொடுக்கப்பட்டது. ஆகையால் இப்போராட்டம் கைவிடப்படுகிறது.

MUST READ