spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை புகைப்பட கண்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை புகைப்பட கண்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

-

- Advertisement -

சென்னை புகைப்பட கண்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Image

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சென்னை தினமாகக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு தனது 384 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் சென்னையின் முக்கிய நிகழ்வுகள், இடங்கள் அடங்கிய ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

we-r-hiring

Image

சென்னை photo binnale என்ற NGO மூலம் மூன்று மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு புகைப்பட வகுப்புகள் கடந்த 6 மாதமாக நடத்தப்பட்டது. அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மாணவர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர் பாபு, தங்கம் தென்னரசு , மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தி இந்து குழும தலைவர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ