spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைடோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

-

- Advertisement -

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

சென்னையில் பிரபல தனியார் பேக்கரியில் (CK BAKERY) கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். வழக்கறிஞரான இவர் நேற்று மாலை தனது வீட்டு அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியாருக்கு சொந்தமான (CK bakery) பேக்கரியில் தனது குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைக்கு டோனட் கேக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டோனட் கேக்குகளை உட்கொண்ட குழந்தைகளான ஹனி கென்சி, அஹானா கென்சி என்ற இரு குழந்தைகளுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரின் பெற்றோர்கள் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

மேலும் வீட்டில் மீதம் இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர்கள் சோதித்ததில் கேக்குகள் பூரணம் அடைந்த நிலையில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்கு சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணான பதிலையும் கூறியுள்ளார்.

மேலும் பேக்கரி உரிமையாளரிடம் பெற்றோர்கள் பேச வேண்டும் என அழைத்த போது அவர் வெளியூரில் இருப்பதாக கூறி வர மறுத்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் செய்தியாளர்கள் பேக்கரியை சூழ்ந்த நிலையில் பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீதமிருந்த டோனட் கேக்குகளை குப்பையில் வீசி உள்ளனர்.

இதைப்பற்றி அங்கிருந்தவர்கள் கேட்டபொழுது டோனட் 12 மணி நேரத்திற்கு மேல் எக்ஸ்பர்ட் (expired) ஆகிவிடும் என்பதால் குப்பையில் கொட்டி விட்டதாக முன்னுக்கு பின் முரணாக கடையில் இருந்த ஊழியர் கூறியுள்ளார்.

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

மேலும் இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பேக்கரியில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. மேலும் குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் தரத்தில் அஜாகிரதையாக செயல்படும் இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

MUST READ