Homeசெய்திகள்சென்னைபாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

-

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு விரைவில் சாலை விரிவாக்க பணி, 6 மேம்பாலங்கள் வர உள்ள நிலையில், கொரட்டூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் வரவுள்ள இடத்தில் 150 அடி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட கூடாது என சென்னை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அலுவலகத்தில் பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள அனைத்து வணிகர்கள், கட்டிட உரிமையாளர்கள், குடியிருப்போர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர், உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள 22 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாகவும், அதில் கொரட்டூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் வரவுள்ள இடத்தில் 150 அடி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் இதனால் வணிகர்கள் கட்டிட உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூட்டத்தில் ஆலோசித்தனர்.

பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள 22 கிலோ மீட்டர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உட்பட்ட சாலையை 6 உயர் மட்ட மேம்பாலங்களுடன் கூடிய 150 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர், சாலையோர கட்டிட உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அழைப்பானை அனுப்பி வருகிறார்கள்.

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

இதனை மாண்புமிகு முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இன்றைய தினம் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நாசர், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அவர்களையும் நேரில் சந்தித்து முறையாக மனு அளித்திருக்கிறோம்.

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து எங்களுக்காக பேசுவதாக கூறியிருக்கிறார்கள். அதன் முடிவை தெரிந்து கொண்ட பின்னர் நாம் அனைவரும் அதற்கான அடுத்தகட்ட போராட்டத்தை பற்றி முடிவு எடுப்போம் என்பதை தீர்மானித்திருக்கிறோம்.

உண்ணாவிரதம் இருப்பதா அல்லது பல்வேறு வகையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்காத வகையில் நம்மை நாமே வருத்திக்கொண்டு அகிம்சை வழியில் போராடுவதா என்று முடிவெடுத்து, சில முக்கிய முடிவுகளையும் எடுக்க இருப்பதாக பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள அனைத்து வணிகர்கள், கட்டிட உரிமையாளர்கள், குடியிருப்போர் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டது.

MUST READ