spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்

தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்

-

- Advertisement -

சென்னை யில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 15,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.

தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்

we-r-hiring

சென்னை மாநகர்ட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது அசம்பாவிதங்களும் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த சாலைகளில் மாடுகள் திரிந்தால் அதனை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதங்களும் விதிக்கின்றனர்.

 

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 15,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு 1000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

 

மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 1,425 மாடுகள் பிடிக்கப்பட்டு, 59 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

MUST READ