Homeசெய்திகள்சென்னைசென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

-

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 57,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280-க்கு வர்த்தகமானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் 640 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 57,920க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ரூ.57,920க்கு வர்த்தகமாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.7,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு கிராம் 105 ரூபாய்க்கு விற்பனையகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம்  உயர்ந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

MUST READ