
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.
உலக அளவில் தங்கம் சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுவதால் அதன் மீதான முதலீடு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நடுத்தர மக்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பலரும் நகைச்சீட்டு போட்டு மாதமாதம் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை அதற்காக ஒதுக்கி தங்கம் வாங்கி வருகின்றனர். ஒரு பக்கம் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் அதேவேளையில் அதன் விலை ஏற்ற இறக்கமாக போக்கு காட்டி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிடுகிடுவென சவரனுக்கு ரூ.2,920 அதிகரித்து நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனையானது. இதனையடுத்து நேற்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்தது. அதன்படி நேற்றைய தினம் ஒரு கிராம் ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,080க்கும் ஒரு சவரன் ரூ.56,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 குறைந்திருப்பது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.