Homeசெய்திகள்சென்னைநகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் 2,240 சரிந்தது.நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…  தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.2,640 குறைந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,600க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதுவும் வாரத்தின் இறுதிநாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,960க்கும் விற்பனை ஆனது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

we-r-hiring

இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே நேற்று தங்கம் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது (மாலை) ஆபரணத் தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைந்து 1,01,360க்கு விற்பனை. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்ததால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…

MUST READ