Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…

தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…

-

- Advertisement -

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். w-1280,h-720,format-jpg,imgid-01jrafrk9vpj9cf1g1apm12r76,imgname-gold-price-1744108801339தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.  கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம், தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் எற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவால் இந்திய சந்தையிலும் இந்த விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 23.03.2026) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 வரை சரிந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.5,360 குறைந்து, தற்போது ரூ.1,03,600க்கு கிடைக்கிறது.

we-r-hiring

இதே நேரத்தில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை ஆகிறது. இந்த திடீர் விலை சரிவு நகை வாங்க நினைப்போருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5000 வரை குறைவது இதுவே முதல்முறையாகும். தங்கத்தின் இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள், இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை வைத்திருக்கும் குடும்பத்தினரும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

22-வது நாளை எட்டியது அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் போர்: 2,500 கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!

MUST READ