Homeசெய்திகள்சென்னைபுழல் காவல் நிலையத்தில் கைவரிசை... இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!

புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!

-

- Advertisement -

புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருட்டு. காவல்துறை விசாரணை.

சென்னை புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புழல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் குற்ற வழக்கு ஒன்றில் கருப்பு நிற யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கட்டிருந்தது.

புழல் காவல் நிலையத்தில் கைவரிசை... இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை! இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சில நாட்கள் கழித்து பார்த்தபோது புழல் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து புழல் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் முத்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புழல் காவல் நிலையத்தில் கைவரிசை... இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!காவல் நிலையத்திற்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா அல்லது யார் உதவியுடன் இருசக்கர வாகனம் திருடி செல்லப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ