சென்னை ஐ.ஐ.டி.யில் ஐந்து நாட்கள் நடைபெறும் கலை விழாவில் பொங்கல் விழா இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.


சென்னை ஐ.ஐ.டி.யில் சாராங் கலைத் திருவிழா நேற்று தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள இந்த கலை விழாவில் கொரியன் திருவிழா உள்ளிட்ட சில புதிய நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. இது குறித்து பேட்டி அளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, ஐந்து நாட்கள் நடைபெறும் 28-வது கலை விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறினார்.
இந்திய கலை கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இந்நிகழ்வு, கொரோனா தாக்கத்தால் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்ததாக குறிப்பிட்ட அவர், இந்த கலை விழா மூலம் சென்னை ஐ.ஐ.டி. குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படும் என்றார்.
பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் பொங்கல் விழா இடம் பெறவில்லை என்பதை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலாக அளித்த காமகோடி, பொங்கல் விழா நடத்துவது குறித்து அடுத்த ஆண்டு திட்டமிட இருப்பதாக தெரிவித்தார்.


